இன்று (17/04/2018) நாகப்பட்டினம் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரி யின் ஆண்டு விழா உற்சாகமாக நடைபெற்றது.சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி, பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் முணைவர் மணலி ச.சோம சுந்திரம், பொறுப்பு முதல்வர் முணைவர் ரெ.ராமு, தமிழ்துறை தலைவர் து.சொக்க லிங்கம், வணிக வேளாண்மைத்துறை தலைவர் பேரா.ஜெ ஜெயந்தி, தமிழ்துறை விரிவுரையாளர் இ.இராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தகவல்;#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்17.04.2018
சட்டமன்றம்
காவிரி போராட்டக்காரர்களை விடுதலை செய்க ! தமிழக முதல்வருடன் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA நேரில் சந்திப்பு!
சென்னை.ஏப்.16., இன்று (16-04-2018) தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், 20 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது காவிரி உரிமைக்காக போராடிய மஜக மாநில பொருளாளர் SS. ஹாரூன் ரசீது மற்றும் நிர்வாகிகள் 6பேர்கள் உட்பட போராட்டக்காரர்கள் அனைவர் மீதும் போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும், அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஜுன் 12 தேதிக்குள் குறுவை சாகுபடிக்கு காவிரி தண்ணீர் தேவை என்பதால், தமிழக அரசின் சார்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும், வலியுறுத்தினார். மேலும் தூத்துக்குடி ஸ்டர்லைட் எதிர்ப்பு போராட்டம், நியுட்ரினோ திட்ட எதிர்ப்பு போராட்டம் ஆகியவை குறித்தும், அதில் தமிழக அரசு மக்கள் உணர்வுகளை புரிந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். தங்களது கருத்துகளை நிச்சயம் பரீசீலிப்பதாக தமிழக முதல்வர் பதிலளித்தார். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையாகம்_சென்னை 16.04.2018
மீனவர்கள் பிரச்சனை குறித்து சட்ட மன்றத்தில் மஜக பொதுச்செயலாளர் பேச்சு…!
பாகம்:4 (மஜக பெதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கடந்த 08/01/2018 அன்று சட்ட மன்றத்தில் பேசிய உரையின் பகுதி பின் வருமாறு...) கண்ணியாக்குமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கேரள அரசு உதவி செய்தது போல தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும் என நானும், அண்ணன் உ.தனியரசு MLA அவர்களும் அங்கு சென்று பார்த்து விட்டு கோரிக்கை விடுத்திருந்தோம். மாண்புமிகு முதல்வர் அவர்கள் உயிரிழந்த மீனவர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், அரசு வேலை ஒருவருக்கும் வழங்கப்படும் என கூறியிருந்தார்கள். அதற்காக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். அதேபோல் ஓகி புயலால் உயிரிழந்த அனைவருக்கும் இந்த தொகையை கொடுக்க வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். காணாமல் போண மீனவர்களை மீண்டும் தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறீர்கள். குமரி மாவட்ட மீணவர்கள் மட்டும் அல்ல கடலூர் தேவணாம்பட்டு, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்களும் அங்கிருந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே அரசு தொடர்ந்து அந்த மீனவர்களை கண்டுபிடிக்கும் பணியில் துரிதம் காட்ட வேண்டும் என்று நான் இந்த நேரத்திலேயே கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம்_சென்னை 18.01.18
வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்!
வாணியம்பாடியில் ஜாமியத்துல் உலமா மற்றும் மஜ்லிஸூல் உலமா அமைப்புகள் இணைந்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் முத்தலாக் மசோதாவை திரும்ப பெற வலுயுறுத்தியும், பாஜகவின் அரசியல் சாசன விரோதம் போக்கையும் கண்டித்து பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ்) ப.ழ. கருப்பையா (திமுக) M.தமிமுன் அன்சாரி MLA (மஜக), வழக்கறிஞர் அந்திரிதாஸ் ( மதிமுக), அபுபக்கர் MLA (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லவி ரஹமத்துல்லா (அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்), அப்துல் சமது(மனிதநேய மக்கள் கட்சி), சையது அஹ்மத் ஹீசைனி (வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா), முகம்மது ஆசாத்(SDPI), இனாமுல் ஹக் சாயபு (ஜாமியத் உலமா), சையத் அப்துல் ரஹ்மான் (நகர தலைமை காஜி) உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் 1500 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம். 12.01.18
சிறைவாசிகள் விடுதலை அறிவிப்புக்கு நன்றி…! தமிழக முதல்வருடன் தனியரசு MLA, தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA சந்திப்பு..!!
சென்னை.ஜன.02., இன்று தமிழக முதல்வர் திரு. எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் அவரின் கீரின்வேஸ் சாலை இல்லத்தில் இன்று காலை11மணியளவில் சந்தித்தனர். அப்போது10ஆண்டுகளை நிறைவுசெய்த ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்வது தொடர்பாக தங்களின் கோரிக்கையை ஏற்று, திண்டுக்கல்லில் நடைபெற்ற MGR நூற்றாண்டு விழாவில் அறிவிப்பு செய்ததற்கு நன்றி தெரிவித்து கொண்டனர். இதில் ராஜிவ் படுகொலை வழக்கு கைதிகள், கோவை குண்டு வெடிப்பு கைதிகள், மாவோயிஸம், நெக்ஸ்லைட்டு, தமிழ் தேசியம் தொடர்பான வழக்குகளில்.தண்டனை பெற்ற கைதிகள் ஆகியோரையும் பட்டியலில் இணைத்து விடுதலை செய்ய வேண்டும் என்று 3 MLAக்களும் விரிவாக எடுத்துரைத்தனர். இதில் உள்ள சட்ட சிக்கல்கள், உச்சநீதிமன்ற வழிகாட்டல்கள் ஆகியவை குறித்து கவனத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கவும், இக்கோரிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிப்பதாகவும் முதல்வர் கூறினார். மேலும் ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கு 10 கோடி நிதி வழங்கியதற்கும் சி.பா. ஆதித்தனாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை பாடப்புத்தகத்தில் சேர்த்ததற்கும் முத்தலாக் குறித்து தமிழக