சென்னையில் CPM பேரணி பாலஸ்தீனர்களுக்கு எதிரான படுகொலையை நிறுத்துக மஜக வினர் பங்கேற்று ஆதரவு…

ஜூன்.02.,

ஆக்கிரமிப்பு இஸ்ரேல், பாலஸ்தீனர்களுக்கு எதிராக நடத்திவரும் இனப்படுகொலைக்கு எதிராக உலகமெங்கும் போராட்டங்களும் கண்டன பேரணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்சி என்ற ஒரு பொறுப்புணர்வோடு இப் பிரச்சனையில் களமிறங்கி உள்ளது.

சென்னையில் இன்று மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) சார்பில் கண்டன பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவளிப்பதாக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அறிக்கை விடுத்திருந்தார்.

சி.பி.ஐ மைய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா அவர்களது தலைமையில் இன்று நடைபெற்ற பேரணி சென்னையில் உள்ள புதுப்பேட்டை பாலம் அருகிலிருந்து தொடங்கப்பட்டது.

கண்டன முழக்கங்கள், பாடல்கள், கவிதைகள், பறை இசை நிகழ்வுகள் என நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

இதில் மஜக-வினர் திரளானோர் பங்கேற்றனர்.

நிறைவாக மஜக மாநிலச் செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக், கலைக்குயில் இப்ராகிம், மாநிலத்துணைச் செயலாளர்கள் அரிமா. அஸாருதீன், பேரா.சலாம் உள்ளிட்டோர் CPM மாநிலச் செயலாளர் தோழர். பாலகிருஷ்ணனை சந்தித்து, CPM எடுத்த இம்முயற்சிக்கு தங்களது புரட்சிகர பாராட்டுகளை கூறினர்.

அவரும் மஜக-வின் ஆதரவுக்கு நன்றி கூறினார்.

இதில் மாணவர் இந்தியா தலைவர் புரட்சி முழக்கம் பஷீர் அஹமது, MJVS மாநில செயலாளர் பிஸ்மில்லா கான், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் காஜா மைதீன், மாவட்ட துணைச்செயலாளர் தாஜுதீன், வடசென்னை மாவட்ட பொருளாளர் ரசாக், மாவட்ட துணைச்செயலாளர் அல்லா பகஷ், தென்சென்னை மாவட்ட பொருளாளர் நாகூரான் மற்றும் மாவட்ட, பகுதி, நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்திய_சென்னை_மாவட்டம்
02.06.2024.