பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராளியுமான சுப.உதயக்குமார் அவர்களை 25.12.2021 அன்று தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், இணை பொதுச்செயலாளர் J.S.ரிஃபாயி, துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பில் சிறைவாசிகள் விடுதலைக்காக ஜனவரி 8 அன்று மஜக முன்னெடுக்கும் கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டம் குறித்தும், போராட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர்களை அழைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் மாநில துணைச் செயலாளர்கள் காயல் சாகுல் ஹமீது, நாகை முபாரக் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம் 25-12-2021
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
மஜக இல்ல திருமணம்! தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, அவர்களின் சகோதரர் திருமணம் இன்று காயல் பட்டினத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், இணை பொதுச் செயலாலர் J.S.ரிஃபாயி, ஆகியோர் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர். இதில் பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயக்குமார், டாக்டர் K.V.S.ஹபீப் முகம்மது, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சமூக ஆர்வலர் வழக்கறிஞர் N.M.அஹம்மது ஸாஹிப், அவர்கள் அனைவரையும் வரவேற்றார், துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர்கள் காயல் சாகுல் ஹமீது ,நாகை முபாரக், மற்றும் தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் முகம்மது நஜிப், பொருளாளர் ராசுக்குட்டி, மாவட்ட துணை செயலாளர் மீரா சாகிப் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், தென்காசி மாவட்ட செயலாளர் பீர் மைதீன், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஃபிஜ்ருல் ஹஃபிஸ் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜாஹிர் உசேன், ருல்பிகர் அலி மற்றும் மாவட்ட, ஒன்றிய,நகர நிர்வாகிகள் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம் 25.12.2021
மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை சந்தித்து..! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வாழ்த்து..!!
சமீபத்தில் வெளியான #மாநாடு திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள சூழ்நிலையில் இப்படத்தை தயாரித்த திரு.சுரேஷ் காமாட்சி அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து "இஸ்லாம் ஒரு பார்வை" எனும் புத்தகத்தை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், ஷமீம் அகமது மற்றும் துறைமுகம் சிக்கந்தர் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது, இப்படம் உருவான சூழ்நிலை குறித்தும், நடிகர் சிம்பு இப்படத்திற்கு அளித்த முழு ஒத்துழைப்பு குறித்தும், இயக்குனர் வெங்கட் பிரபு இத்திரைப்படத்தை இயக்கிய விதம் குறித்தும் மகிழ்வோடு தெரிவித்தார். மேலும் இது போன்ற யாரும் பேச முன்வராத விஷயங்களை தொடர்ந்து வலிமையான ஊடங்கள் மூலம் பேசுவது தான் தமது நோக்கம் என்றும் மகிழ்வோடு தெரிவித்தார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம் 01.12.2021
கேக் மைன் புதிய கிளை திறப்பு விழா..! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது திறந்து வைத்தார் !!
சென்னை மண்ணடியில் கேக் மைன் புதிய கிளை திறப்பு விழா நிகழ்ச்சி (22.11.2021) இன்று காலை மண்ணடி லிங்கி செட்டி தெரு - மேட்டுத்தெரு சந்திப்பில் சிறப்பாக நடைபெற்றது. கடை உரிமையாளர் லுக்மான் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு கேக் மைனின் 7-வது கிளையை திறந்து வைத்தார். இதில் மாநில துணைச் செயலாளர் பொறியாளர் சைஃபுல்லாஹ், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் காஜா மைதீன், துறைமுகம் அபூபக்கர், தாஹா, சிக்கந்தர், அஸ்கர், அம்ஜத் உள்ளிட்ட பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம் 22.11.2021
சங்கராபுரம் வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது நேரில் சந்தித்து ஆறுதல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் பட்டாசு கடையில் நடந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் 20,க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், ஏராளமான பொருட் சேதங்கள் ஏற்பட்டது. இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதிக்கு வருகை புரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, அவர்கள் வெடி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார் பிறகு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு மாநில பொருளாளர் அவர்கள் பேசியதாவது, ஆயிரக்கணக்கான மக்கள் புழங்கும் பஜார் வீதியில் வெடிபொருட்கள் வைக்க எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பதை விசாரிக்க வேண்டும், மேலும் இந்த பட்டாசு கடையின் உரிமையாளருக்கு பல இடங்களில் குடோன்கள் உள்ளது அவற்றையும் அதிகாரிகள் திறந்து ஆய்வு செய்ய வேண்டும், தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் இந்த கடையில் இருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர் மேலும் இந்த கடையில் கேஸ் சிலிண்டர்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டதாகவும் அந்த சிலிண்டர்கள் வெடித்து தான் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது, இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். அதைத்தொடர்ந்து இந்த விபத்தில் இறந்தவர்களின் வீடுகளுக்குச்