கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் பட்டாசு கடையில் நடந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் 20,க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், ஏராளமான பொருட் சேதங்கள் ஏற்பட்டது.
இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதிக்கு வருகை புரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, அவர்கள் வெடி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார் பிறகு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு மாநில பொருளாளர் அவர்கள் பேசியதாவது,
ஆயிரக்கணக்கான மக்கள் புழங்கும் பஜார் வீதியில் வெடிபொருட்கள் வைக்க எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பதை விசாரிக்க வேண்டும், மேலும் இந்த பட்டாசு கடையின் உரிமையாளருக்கு பல இடங்களில் குடோன்கள் உள்ளது அவற்றையும் அதிகாரிகள் திறந்து ஆய்வு செய்ய வேண்டும், தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் இந்த கடையில் இருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர் மேலும் இந்த கடையில் கேஸ் சிலிண்டர்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டதாகவும் அந்த சிலிண்டர்கள் வெடித்து தான் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது, இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து இந்த விபத்தில் இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நிகழ்வில் மாவட்ட பொறுப்பு குழுத்தலைவர் ஜாவித், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் சௌகத் அலி, விழுப்புரம் தெற்கு மாவட்டத் துணைச் செயலாளர் அபுதாஹீர் விழுப்புரம் தெற்குமாவட்டத் துணைச் செயலாளர் நாசர்அலி, திருக்கோவிலூர் நகர செயலாளர் சாதிக் பாஷா, இளைஞரணி செயலாளர் சர்தார், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், திருக்கோவிலூர் ஜமாஅத் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கள்ளக்குறிச்சி_மாவட்டம்
28.10.2021