மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை சந்தித்து..! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வாழ்த்து..!!

சமீபத்தில் வெளியான #மாநாடு திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள சூழ்நிலையில் இப்படத்தை தயாரித்த திரு.சுரேஷ் காமாட்சி அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து “இஸ்லாம் ஒரு பார்வை” எனும் புத்தகத்தை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அவருடன் துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், ஷமீம் அகமது மற்றும் துறைமுகம் சிக்கந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது, இப்படம் உருவான சூழ்நிலை குறித்தும், நடிகர் சிம்பு இப்படத்திற்கு அளித்த முழு ஒத்துழைப்பு குறித்தும், இயக்குனர் வெங்கட் பிரபு இத்திரைப்படத்தை இயக்கிய விதம் குறித்தும் மகிழ்வோடு தெரிவித்தார். மேலும் இது போன்ற யாரும் பேச முன்வராத விஷயங்களை தொடர்ந்து வலிமையான ஊடங்கள் மூலம் பேசுவது தான் தமது நோக்கம் என்றும் மகிழ்வோடு தெரிவித்தார்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
01.12.2021