மலேசியாவில் கொரோனாவில் பாதிக்கபட்டு தீவிர சிகிச்சையில் இருந்த தமிழகத்தை சேர்ந்த வீரராகவன் என்ற சகோதரர் நேற்றைய தினம் இறந்து விட்டார். முன்னதாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கபடுவது குறித்தான தகவல் மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாட்டு சார்பு அமைப்பான கத்தார் மண்டல மனிதநேய கலாச்சாரப் பேரவைக்கு கிடைத்தது. கத்தார் மண்டல செயலாளர் யாஸின் அவர்கள் மலேசியாவில் உள்ள ஜொகுர் மண்டல மனிதநேய கலாச்சாரப் பேரவையின் பொருளாளர் சகோதர் சுல்தான் அவர்களை தொடர்புகொண்டு இது குறித்த விபரம் தெரிவிக்கபட்டது. சகோதரர் சுல்தான் அவர்கள் மருத்துவமனையை தொடர்புகொண்டு நிலைமையை அறிந்து தொடந்து கிசிச்சையை கண்காணித்து வந்தார் மேலும் தீவிர சிகிச்சைக்கான பணிகளையும் முன்னெடுத்தார். எனினும் வீரராகவன் இறந்து விட்டார். அவரது இறுதி நிமிடங்களில் மலேசிய MKP சொந்தங்கள் ஆற்றிய சேவையை அக்குடும்பத்தினர் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர். தகவல்;. #மனிதநேய_கலாச்சார_பேரவை ஜொஹர் (மலேசியா) கத்தார் மண்டலங்கள் 12.09.2021
மலேசியா
மலேசியா
பாலஸ்தீன மக்களுக்காக பிரார்த்திப்போம்..! ஜொஹூர் இஃப்தார் நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA உருக்கம்..!!
ஜொஹர்.மே.18., இன்று மலேசியாவின் ஜொஹூர் பாரூ மாநகரில் #மஸ்ஜித்_இந்தியா (தமிழ் ஜமாத்) பள்ளிவாசலில் நடைபெற்ற நோன்பு துறப்பு இஃப்தார் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA பங்கேற்றார். அவரை பள்ளிவாசல் தலைவர் டத்தோ.ஹாஜா மைதீன் அவர்களும், இமாம்கள் மெளலவி.ஹாபிழ் சல்மான் பாரிஸ் மிஸ்பாஹி, மெளலவி.ஹாபிழ் முஹம்மது யஹ்யா மிஸ்பாஹி ஆகியோரும் வரவேற்றனர். நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற அந்த இஃப்தார் நிகழ்வில் பேசியவர், புனித ரமலானில் #பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அராஜகத்தை நிகழ்த்தி வருகிறது. 60க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கண்ணீரில் அங்கே ரமலான் கழிகிறது. விடுதலைக்கு ஏங்கும் #பாலஸ்தீன_மக்களுக்காக_இறைவனிடம்_பிரார்த்தியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். புனித ரமலானில் உலகெங்கும் அமைதி நிலவ பாடுபட வேண்டும் என்றார். பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் துன்.மஹாதீர் மீண்டும் பிரதமராகி இருப்பது உலகளவில் பேசப்படுவதாகவும், தமிழகத்திலும் எதிரொளிப்பதாகவும் கூறினார். மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு #மனிதநேய_கலாச்சார_பேரவை (#MKP) நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெற்றது. பொதுச்செயலாளர் அவர்களின் சட்டமன்ற பணிகளை அனைவரும் வரவேற்று பேசினர். MKP - ஜொஹர் மாநகர நிர்வாகிகள் பீக்கர் அலி, அட்டாக் சுல்தான், அபுல் பரக்கத், சாஹுல் ஹமீது, அமீன் உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பொதுச்செயலாளரை சந்திக்க ஜொஹூர் மாநிலம் முழுவதும் உள்ள இந்திய பிரமுகர்கள் வருகை
மஹாதீருக்கு வாழ்த்துக்கள்..! மலேசியாவை காப்போம் என சூளுரைத்தார்! வெற்றிக் கண்டார்!
(மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியீடும் வாழ்த்துச் செய்தி..!) ஆசியாவின் தொட்டிலாக கொண்டாடப்படும் நாடு மலேசியா. நேற்று அங்கே நடைப்பெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியீடப்பட்டிருக்கிறது. கடந்த 60 ஆண்டு காலமாக அந்த நாட்டை தேசிய முன்னணி என்ற மூன்று இனங்களை பிரதிபலிக்கும் 'பாரிசான் நேஷ்னல்' ஆண்டு வந்தது .அதில் அவர் 70 சதவீத மக்கள் தொகையை கொண்ட பூர்வீக இனமான மலாய் மக்களை கொண்ட அம்னோ கட்சி பிரதானமாக இருந்தது. 60 ஆண்டு கால தொடர் ஆட்சியில் நஜீப் துன் ரசாக் ஆண்ட போது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்தது, அவரது மனைவி ரோஸ்மா மன்சூர் பிலிப்பைன்ஸ் 'இமல்டா' வுடன் ஒப்பிடப்பட்டார். மனைவியின் ஊழலால் அவர் பெயர் கடந்த 3 ஆண்டுகளில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. வெளிநாடு ஒன்றில் இருந்து அவர் பெற்றதாக கூறப்படும் நன்கொடை பெரும் ஊழலாக விவாதிக்கப் பட்டது. இந்நிலையில் தான் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி அதிகாரத்தை அப்துல்லா படாவி கையில் ஒப்படைத்த மஹாதீர், மீண்டும் தனது 92 வயதில் களத்துக்கு வந்தார். கடும் விமர்சனங்களை அரசுக்கு எதிராக கூறினார். இதனால் அம்னோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் புதிய கட்சியை
வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்!
வாணியம்பாடியில் ஜாமியத்துல் உலமா மற்றும் மஜ்லிஸூல் உலமா அமைப்புகள் இணைந்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் முத்தலாக் மசோதாவை திரும்ப பெற வலுயுறுத்தியும், பாஜகவின் அரசியல் சாசன விரோதம் போக்கையும் கண்டித்து பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ்) ப.ழ. கருப்பையா (திமுக) M.தமிமுன் அன்சாரி MLA (மஜக), வழக்கறிஞர் அந்திரிதாஸ் ( மதிமுக), அபுபக்கர் MLA (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லவி ரஹமத்துல்லா (அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்), அப்துல் சமது(மனிதநேய மக்கள் கட்சி), சையது அஹ்மத் ஹீசைனி (வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா), முகம்மது ஆசாத்(SDPI), இனாமுல் ஹக் சாயபு (ஜாமியத் உலமா), சையத் அப்துல் ரஹ்மான் (நகர தலைமை காஜி) உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் 1500 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம். 12.01.18
கத்தாரை தனிமைப்படுத்துவது நல்லதல்ல .!
(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதள பதிவு) வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாருடன் அரசியல் உறவுகளை சவுதி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நான்கு நாடுகள் திடீரென துண்டித்துக் கொண்டுள்ளது பன்னாட்டு அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அந்த நான்கு நாடுகளும் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. ஈரானின் புதிய அதிபர் ஹஸன் ரவுஹானியை கத்தார் இளவரசர் தமிம் பின் ஹமத் அல்தானி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததை ஒரு குற்றமாக அந்நாடுகள் கூறியுள்ளன. இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் தந்திரங்களும், திட்டங்களும் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. இந்த நான்கு நாடுகளும் அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவை. கத்தார் அமெரிக்காவுடன் ஒரு இடைவெளியை கடைப்பிடிக்கிறது. இது தவிர எகிப்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மொர்ஸி அவர்களின் ஆட்சி கவிழ்ப்பை அந்த நான்கு நாடுகளும் ஆதரித்தன. அமெரிக்காவும் ஆதரித்தது. ஆனால் கத்தார் எதிர்த்ததையும் இங்கே கவனிக்க வேண்டும் . கத்தார், பாலஸ்தீன போராட்டத்திற்கு துருக்கியை போலவே குறிப்பாக ஹமாஸ் விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு தரும் நாடு . மேலும் CNN, BBC ஊடகங்களுக்கு மாற்றாக அல்ஜெஸிரா எனும்