இதை அமுக்கவும்
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
இந்திய சுதந்திர பவள விழா… மஜக முழக்கங்கள்
இந்திய சுதந்திர பவள விழா.. ▪️ மஜக முழக்கங்கள் ▪️ 1. வாழ்க, வாழ்க, வாழ்கவே... . இந்திய தேசம் வாழ்கவே 2. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்... . சுதந்திர தின வாழ்த்துக்கள் 3. ஒன்றுபடுவோம், ஒன்றுபடுவோம் . தேசம் காக்க ஒன்றுபடுவோம் 4. அணி திரள்வோம், அணி திரள்வோம் . ஜனநாயகம் காக்க அணி திரள்வோம் 5. வளர்த்தெடுப்போம், வளர்த்தெடுப்போம் . நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்போம் 6. நினைவு கூர்வோம், நினைவு கூர்வோம் . சுதந்திரப் போரின் தியாகிகளை . நினைவு கூர்வோம், நினைவு கூர்வோம் 6. காந்தியும், நேருவும்.... கட்டிக்காத்த லட்சியத்தை... . காத்திடுவோம், காத்திடுவோம் 7. பவள விழா கொண்டாடும்... இந்தியாவின் சுதந்திரத்தை... பேணிக் காக்க உறுதியேற்போம்... 8. நேதாஜியும், சிராஜித் தெளலாவும்... . பகதூர்ஷாவும், பகத்சிங்கும்... . எண்ணற்ற போராளிகளும்... . ஈன்றெடுத்த விடுதலையை... . கொண்டாடுவோம், கொண்டாடுவோம்
நீலகிரியில் மஜக வில் இணைந்த இளைஞர்கள்..
ஜூன் :19., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக, நீலகிரி கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் T. கமாலுதீன் ,மாணவர் இந்தியா மாநிலச் செயலாளர் பெரியார் கார்த்தி,முன்னிலையில் திரளான இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டணர். புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கை,மற்றும் கட்சியின் பணிகள், நிர்வாக கட்டமைப்பு குறித்து விளக்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மஜக மாவட்ட துணை செயலாளர் அதிப் , மருத்துவ அணி மாவட்டச் செயலாளர் T.ரிஸ்வான்,மனிதஉரிமை கழகத்தின் மாவட்டச் செயலாளர் தப்ரேஸ் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நீலகிரி-கிழக்கு_மாவட்டம் 18.06.2022
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியவர்கள் கைதுசெய்யப்படவேண்டும்!
மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை! இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகின் சிறந்ததொரு வழிகாட்டியாக பல தரப்பினராலும் கொண்டாடப்படுகிறார். 14 நூற்றாண்டுகளை கடந்தும் அவரது இறைச் செய்திகளும், அறிவுரைகளும் அன்றாடம் உயிர் துடிப்போடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அவரது ஆளுமை என்பது காலங்களை கடந்து வரலாற்றை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அதனால்தான் முஸ்லிம்கள் மட்டுமின்றி பல சமூக மக்களும் போற்றும் தலைவராக அவர் மதிக்கப்படுகிறார். அவ்வப்போது சகிப்புத்தன்மையற்றவர்களும், புரிதலற்றவர்களும் அவர் முன் வைத்த கொள்கைகளையும், அவரையும் காயப்படுத்தும் போதெல்லாம் உலகம் அதிர்கிறது . சமீப காலமாக நமது நாட்டில் காவி வலதுசாரி சக்திகள் வெறுப்பு அரசியலை வேகமாக வளர்த்து வரும் நிலையில், இந்திய ஒன்றியத்தை ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா என்பவர் நபிகள் நாயகத்தை திட்டமிட்டு அவதூறு செய்திருக்கிறார். முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக, எதைப் பேசினாலும் காப்பாற்றுவதற்கு அதிகார வர்க்கம் துணைபுரியும் என்ற துணிச்சலில்தான் இப்படிப்பட்ட பேச்சுகள் வெளிப்படுகின்றன. ஒன்றிய அரசை ஆளும் ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரின் விஷமப் பேச்சு, உலகின் பல நாடுகளால் கண்டிக்கப்பட்டிருக்கும்
செப்.10 தலைமைச் செயலகம் முற்றுகை… பெருமளவில் மக்களை திரட்டுக!
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள்! மே.09., புதுக்கோட்டை மேற்கு மாவட்ட மஜகவின் நிர்வாகக்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் முகம்மது ஜான் தலைமையில் நடைப்பெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். அவருடன் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் அவர்கள் பங்கேற்று செப்டம்பர் 10, தலைமைச் செயலக முற்றுகை குறித்த விவாதங்களை தொடங்கி வைத்தார். கலந்துரையாடலின் போது பொதுச் செயலாளர் அவர்கள், மாவட்டத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் பஸ் மற்றும் வேன்களில் மக்களை திரட்ட வேண்டும் என்றும் அதற்கான ஆயத்த வேலைகளை தொடங்க வேண்டும் என்றும் கூறினார். விரைவில் சுவர் விளம்பர மாதிரி வடிவங்கள் வழங்கப்படும் என்றும், அதன் படி விளம்பர பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் கூறினார். விரைவில் மாவட்ட பொதுக்குழு மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட அளவில் புதிய கிளை கட்டமைப்புகளை தொடங்குவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மாநில துணைச் செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான துரை முகம்மது அவர்கள் நன்றி கூற கூட்டம் உற்சாகத்துடன் நிறைவு பெற்றது. இதில் மாநில துணைச் செயலாளர்கள் அப்துல் சலாம், கோட்டை.ஹாரிஸ் ஆகிய