வேதை.நவ.14., நாகை மாவட்டம், தோப்புத்துறையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதாலும், கழிவு நீர் அடைப்பாலும் குட்டையன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதை சீர் செய்ய தாமதம் ஏற்பட்டதையடுத்து இன்று நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் வேதாரண்யம் நகராட்சி முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் நகராட்சி ஊழியர்கள் வருகை தந்து மஜகவினரின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். அதன் பிறகு இரவுக்குள் துரித நடவடிக்கை எடுக்கப்படடும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால், முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டதாக மஜகவினர் அறிவித்தனர். மஜகவினரின் முன் முயற்சிகளுக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர். தகவல், #MJK_IT_WING #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #மஜக_நாகை_மாவட்டம் 14.11.21
நாகப்பட்டிணம்
நாகையில் அஸ்ஸாம் அரச பயங்கர வாதத்தை கண்டித்து மஜக ஆர்ப்பாட்டம்! மாநில துணை செயலாளர் நாகை முபாரக் கண்டன உரை நிகழ்த்தினார்!
அஸ்ஸாமில் சிபாஜ்ஹாரில் 30 ஆண்டுகளாக குடியிருந்த மக்களை விரட்ட அரச பயங்கரவாதத்தை ஏவிய பாஜக அரசை கண்டித்து இன்று நாகை நகரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் அஜிஜுர் ரஹ்மான், அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா @சாகுல் ஹமீது, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் ரெக்ஸ் சுல்தான், முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் நாகை முபாரக், அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் நகர பொருளாளர் அப்துல் (செல்லத்துரை) மற்றும் மண்டல நிர்வாகி ஃபர் மானுல்லாஹ், ஒன்றிய துணை செயலாளர் மஞ்சை சதாம், நகர நிர்வாகிகள் ஹாஜி அப்துல் காதர், அனாப் ,ரிபாய், அனிஸ், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாகை_மாவட்டம் 01.10.2021
நாகை மாவட்டம் திட்டச்சேரியில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு!
நாகை:செப்.20., மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கண்டன போராட்டம் நாகை மாவட்டம் திட்டச் சேரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் திட்டச்சேரி.ரியாஸ், பேரூர் செயலாளர் முஹம்மது இப்ராஹிம் தலைமையில் நகர நிர்வாகிகள், மற்றும் மஜக வினர் திரளானோர் கலந்து கொண்டனர் தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாகை_மாவட்டம் 20.09.2021
மஜக மயிலாடுதுறை மாவட்ட ஆலோசனைக்கூட்டம்! மாநில துணைச்செயலாளர் நாகை முபாரக் பங்கேற்பு!!
செப்.04,. மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட ஆலோசனை கூட்டம் (MJVS) மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க மாநில துணை செயலாளர் N.M.மாலிக் தலைமையில் நீடூரில் நடைப்பெற்றது. மஜக மாநில துணை செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான நாகை முபாரக் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கட்சி வளர்ச்சி பணிகள், கிளை கட்டமைப்பு மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்து பேசினார். கூட்டத்தின் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன... 1. சபியாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் சபியா சைஃபி என்ற பெண் காவல் அதிகாரி நான்கு நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதுடன் 50 இடங்களில் வெட்டப்பட்டும் மார்பகங்களை அறுத்தும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொடூரச் சம்பவம் நடைபெற்று ஒரு வாரகாலமாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படாதது கண்டனத்திற்குரியது. டெல்லியின் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்றிய அரசு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. 2. அண்ணா பிறந்த நாளான செப்-15 முன்னிட்டு 10 ஆண்டுக்கு மேல் உள்ள ஆயுள் சிறைவாசிகளை ஜாதி, மத, வழக்கு பேதமின்றி முன்விடுதலை செய்ய வேண்டும் எனவும் தீர்மானம்
திருப்பூண்டியில் மஜக சார்பில் சுதந்திரதின கொண்டாட்டம்! இணையவழி சேவையை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி உற்சாகம்!!
75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூண்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மூன்று இடங்களில் தேசிய கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் J .ஷாகுல் ஹமீது தலைமையில், மாவட்ட துணை செயலாளர் M.சபுருதீன் மற்றும் விவசாய அணியின் மாவட்ட செயலாளர் V.ஜெக்கரியா ஆகியோர் கொடிகளை ஏற்றினர். தொடர்ந்து மஜக சார்பில் ஆதார் அட்டை, பான் கார்டு இணைத்தல், கணினி சிட்டா நகல் எடுத்தல் உள்ளிட்டவை சேவைகளை மாலை வரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய, கிளை, அணி நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.