ஜூன்.01.,
கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாத தாக்குதலில் இதுவரை 36 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.
தற்போது பலஸ்தீனர்கள் அகதிகளாக அடைக்கலமாகியுள்ள ரஃபா நகரின் மீது ஐ.நா. மன்றம் மற்றும் சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இஸ்ரேல் ஈவு – இரக்கமற்ற தாக்குதலை தொடங்கியுள்ளது.
இது உலகம் முழுக்க பேரதிர்வுகளையும், கடும் கண்டனங்களையும் உருவாக்கியுள்ளது .
இந்நிலையில் இந்த அநீதியை கண்டித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாளை ஜூன் 2 அன்று தமிழ்நாடு முழுக்க கண்டன ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .
இதனை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்பதுடன் முழுமையான ஆதரவையும் இப் போராட்டத்திற்கு தெரிவித்துக் கொள்கிறது .
இப் போராட்ட களங்களில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் திரளாக பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது .
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி (CPM) முன்னெடுத்திருக்கும் ஜனநாயக கடமையை இதர தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் .
உலகமே பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாறியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து ஜனநாயக சக்திகளும் திரண்டு, தங்களுடைய எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் .
இவண்,
மு.தமிமுன்அன்சாரி
தலைவர்
மனிதநேய ஜனநாயக கட்சி
01 .06 .2024.