இதை அமுக்கவும்
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!
மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!
மனிதநேய ஜனநாயக கட்சியின், தகவல் தொழில்நுட்ப அணியின் (IT WING) மண்டல செயலாளர்களாக, 1) பந்தநல்லூர் உஸ்மான் அலைபேசி; 99765 36466 2) குடியாத்தம் முபாரக் அலைபேசி; 86087 26832 3) நாகை ரெக்ஸ் சுல்தான் அலைபேசி; 96980 06664 4) ஈரோடு எக்சான் அலைபேசி; 98949 69752 5) தோப்புத்துறை முபீன் அலைபேசி; 95006 26736 6) நீடூர் குர்ஷித் கான் அலைபேசி; 73589 31095 7) சங்கரன்கோவில் பீர் மைதீன் அலைபேசி; 88072 83401 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 28.03.2022
மஜக திருப்பூர் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி ஜனவரி 8 கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து திருப்பூர் (தெற்கு) மாவட்டம் சார்பில் தாராபுரம் நகரம், மற்றும் உடுமலை நகர, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முஸ்தாக் அகமது, மாவட்ட பொருளாளர் முஜிபுர் ரகுமான், ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தின் இறுதி கட்ட பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் பாபு, அபுதாஹிர், ஆஷிக், மறும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருப்பூர்_தெற்கு_மாவட்டம் 02.01.2022
தேனியில் மஜக துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி சுற்றுப்பயணம்!!
ஜனவரி 8 அன்று கோவை சிறை முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு தமிழகமெங்கும் மஜக வினர் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். இன்று தேனி மாவட்டத்தில் மஜக துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, அவர்கள் கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம், ஆகிய பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து மஜக வினரை சந்தித்து பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். விளம்பர பணிகள், வாகன ஏற்பாடுகள், அடிப்படை பணிகளுக்கு நன்கொடை சேகரித்தல் ஆகியவை குறித்து மாவட்ட செயலாளர் கரீம், உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். அவரது பொறுப்பில் உள்ள மதுரை,தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் பெருமளவு மக்களை திரட்டும் பணியில் அவர் மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இன்று அவருடன் தேனி மாவட்ட பொருளாளர் சேக் பரீத், மாவட்ட துணை செயலாளர் அம்ஜத் மீரான், கம்பம் நகர துணைச்செயலாளர் ஷாஜஹான், கம்பம் நகர மருத்துவ சேவை அணி செயலாளர் ஷாஜஹான், உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தேனி_மாவட்டம் 02.01.2022