காணொளியில் மஜக கூட்டம் இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் திரள வேண்டும் UAPA சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்துவதை தவிர்க்க வேண்டும் மஜக சிறப்பு நிர்வாகக் குழுவில் தீர்மானங்கள்…

ஜூன்.02.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம் காணொளி வழியாக தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நேற்று நடைப்பெற்றது.

இதில் தலைமை நிர்வாகிகள், மாநிலத் துணைச் செயலாளர்கள், மாநில அணிச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

இதில் கட்சியின் கடந்த 6 மாத கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு பாரபட்ட கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிறைவாக பொதுச் செயலாளர் மெளலா. நாசர் அவர்கள் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது.

அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை பின்வருமாறு…

1. இஸ்ரேலுக்கு கண்டனம்

பாலஸ்தீனத்தின் ரஃபா நகரில் அகதிகளாக அடைக்கலமாகியிருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் பயங்கரவாத யுத்தத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி இஸ்ரேல் நடத்தும் இந்த அராஜகத்திற்கு எதிராக இந்தியாவில் செயல்படும் ஜனநாயக சக்திகள் அணி திரள வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது

2. UAPA சட்டத்தை அமல்படுத்த வேண்டாம்

மக்கள் விரோத சட்டம் என மனித உரிமை அமைப்புகளால் குற்றம் சாட்டப்படக்கூடிய UAPA சட்டத்தை தமிழ்நாட்டில்hஅமல்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

இச்சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவர்களை வேறு குற்றவியல் சட்டங்களில் வழக்கு பதிவு செய்யுமாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

3. தேர்தல் ஆணைய செயல்பாடுகள் கவலையளிக்கிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது அடுத்தடுத்து வரக்கூடிய மக்கள் ஐயங்களும், விமர்சனங்களும் ஆழ்ந்த கவலையை தருகிறது.

இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்க கூடிய மிகப்பெரிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது என்பதை தலைமை தேர்தல் ஆணையர்கள் உணர்ந்து மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது .

4. மஜக நிகழ்ச்சிகள்

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொதுக் குழு, மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தை ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தொடர்ந்து முன்னெடுப்பது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

5. கல்வி நன்கொடைக்கு வரையறை தேவை

தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் நன்கொடை என்ற பெயரில் வரம்பு மீறிய தொகையை வசூல் செய்வதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.

இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு உரிய வரையறைகளை – வழிகாட்டல்களை வழங்க வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
01.06.2024.