ஜனவரி.30,
காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 அன்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் திருவெற்றியூர் தொடங்கி கன்னியாக்குமரி வரை 950 கி.மீ நீளத்திற்கு மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டது.
CAA,NRC,NPR ஆகிய குடியுரிமை தொடர்பான கறுப்பு சட்டங்களுக்கு எதிராக அணிதிரள்வோம் என அறிவிக்கப்பட்டது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சி உட்பட பல கட்சிகளும், இயக்கங்களும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றன.
சென்னையில் அண்ணா மேம்பாலம் முதல் சைதாப்பேட்டை வரை மஜக தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது.
இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., இயக்குனர் கௌதமன், இயக்குனர் புகழேந்தி, மஜக துணை பொதுச் செயலாளர் தைமியா உட்பட பத்திரிக்கையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் அணிவகுத்தனர்.
குடும்பம், குடும்பமாக மக்கள் குழந்தைகளுடன் அணிவகுக்க மனிதசங்கிலி மனித சுவராக மாறியது.
சென்னை புதுக்கல்லூரி, லயோலா, நந்தனம், பிரசிடென்சி கல்லூரி மாணவர்களும், SIET, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளும் ஆவேசமாக முழக்கமிட்டு அணிவகுத்தனர்.
“எங்கள் மரபணுவை சுமக்கும் இஸ்லாமிய உறவுகளை இழக்க அனுமதிக்க மாட்டோம் ” என இயக்குனர் கௌதமன் முழங்கினார்.
” காந்தியடிகளை கொன்ற கோட்சே கும்பலை விரட்டியடிப்போம்” என இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் முழங்கினார்.
போராட்ட களம் எழுச்சியாக தொடங்கியது.
4:30 மணிக்கு அண்ணாசாலை நிறைந்தது.
ஆனால் போக்குவரத்துக்கு சிறு சேதமும் இல்லாமல் மனிதசங்கிலியில் மக்கள் அணிவகுத்ததை போலீசார் பாராட்டினர்.
கள அணிவகுப்பை நாடு தழுவிய அளவில் தொலைக்காட்சிகள் நேரலை செய்தவாறு இருந்தன.
தன்னெழுச்சியாக நடைபெறும் இப்போராட்டங்களை இராணுவம், போலீஸ் மற்றும் துப்பாக்கி கொண்டு அடக்கி விட முடியாது என பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., கூறினார்.
இதில் பெருமளவில் பத்திரிக்கையாளர்களும், படைப்பாளிகளும் கரம் கோர்த்தது ஒரு திருப்பு முனையாகும்.
கேரளா 670 கி.மீ தூரம் வரை மனிதச் சங்கிலியை நடத்தியது. தமிழ்நாடு 950 கி.மீ தூரம் மனிதச்சங்கிலி நடத்தி மத்திய, மாநில அரசுகளை எச்சரித்திருக்கிறது.
களத்தின் நடுவே குறும்பட வெளியிடும் நடந்தது.
மக்களை நடுத்தெருவில் நிறுத்தும் இச்சட்டங்களை கண்டித்து “மனிதம் “என்ற குறும்படம் ஒன்று தயாரிக்கப்பட்டது.
அதை போராட்டக்களத்தில் இயக்குனர் கவுதமன் வெளியிட இயக்குனர் புகழேந்தி பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் எட்டு திசைகளிலும் குறுக்கும் நெடுக்குமாக மனிதசங்கிலியை நடத்தி தமிழர்கள் நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.
இந்நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலளார்கள் ஷமீம், ஷஃபி, இளைஞர் அணி செயலாளர் அசாருதீன்,தகவல் தொழில் நுட்ப அணி மாநில பொருளாளர் ஹமீது ஜெஹபர், துணைச் செயலாளர் தாரிக், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மி, தென் சென்னை மாவட்ட செயலாளர் கையூம் ,தலைமை செயற்குழு உறுப்பினர் கடாபி, தலைமைக் கழக பேச்சாளர் மீரான், உட்பட நூற்றுக்கணக்கான மஜக வினரும் பங்கேற்று ஆர்ப்பரித்தனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#சென்னை.