திருப்பூர்.ஆக.16., திருப்பூர் மாவட்ட மாணவர் இந்தியா ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது . இந்த கூட்டத்திற்கு மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நவ்ஃபில் ரிஸ்வான் தலைமை தாங்கினார். மாணவர் இந்தியா மாவட்ட துணைச்செயலாளர் ஜாபர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ஹைதர்அலி. மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது மாவட்ட துணைச் செயலாளர் லியாகத் அலி. வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் அபு. வ.அணி மா.து.செயலாளர் ரஹ்மான். இளைஞரணி மாவட்ட செயலாளர் அசாருதீன். இ.அணி.மா.து.செயலாளர்.அபுதாஹீர். ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட மாணவர் இந்தியா சார்பாக அதிகமான மாணவர்களை சமூகநலப் பணிகளில் ஈடுபட செய்வது குறித்தும், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் எதிர்வரும் 19-08-2018 ஞாயிற்றுக்கிழமை சிராஜ் மஹாலில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் பங்குபெறும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், அடுத்த மாதம் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA உள்ளிட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கு பெறும் மாபெரும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்திற்கு சிறப்பான பங்களிப்பை செலுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட அலுவலகத்தை பகுதி நேர நூலகமாக மாற்றவேண்டும்
மாணவர் இந்திய
மாணவர் இந்திய
வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்!
வாணியம்பாடியில் ஜாமியத்துல் உலமா மற்றும் மஜ்லிஸூல் உலமா அமைப்புகள் இணைந்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் முத்தலாக் மசோதாவை திரும்ப பெற வலுயுறுத்தியும், பாஜகவின் அரசியல் சாசன விரோதம் போக்கையும் கண்டித்து பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ்) ப.ழ. கருப்பையா (திமுக) M.தமிமுன் அன்சாரி MLA (மஜக), வழக்கறிஞர் அந்திரிதாஸ் ( மதிமுக), அபுபக்கர் MLA (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லவி ரஹமத்துல்லா (அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்), அப்துல் சமது(மனிதநேய மக்கள் கட்சி), சையது அஹ்மத் ஹீசைனி (வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா), முகம்மது ஆசாத்(SDPI), இனாமுல் ஹக் சாயபு (ஜாமியத் உலமா), சையத் அப்துல் ரஹ்மான் (நகர தலைமை காஜி) உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் 1500 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம். 12.01.18