பி.06., (பாகம் 3) ஜனவரி 5 அன்று சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி MLA„ அவர்கள் நாகை தொகுதி சார்ந்த கோரிக்கைளை பேசினார். அடுத்தடுத்த புயல்கள், தொடர் மழை காரணமாக நாகை தொகுதி முழுக்க சாலைகள் பழுதடைந்து கிடக்கிறது. அதை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன். சாமந்தான்பேட்டை மீனவர்கள் தங்கள் பகுதியில் மீன்பிடி இறங்குதளம் அமைத்து தர வேண்டும் என போராடுகிறார்கள். மீன்பிடி இறங்குதளம் அல்லது அதற்கு இணையான மாற்று திட்டம் ஒன்றை அங்கு அமைத்து தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நாகை மற்றும் நாகூர் கடற்கரைகளை மேம்படுத்தி தர இதே அவையில் பலமுறை பேசியிருக்கிறேன் அவற்றை விரைந்து நிறைவேற்றி தர வேண்டுகிறேன். அதே போல திருமருகலை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்றும் இதே அவையில் வலியுறுத்திருக்கிறேன். அதையும் செயல்படுத்தி தருமாறும் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். தகவல் #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம் 05.02.2021
சட்டமன்றம்
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்! தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக சட்டசபையில் மு தமிமுன் அன்சாரி MLA உரை!
கடந்த 16.09.2020 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை 2020 குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அதில் பேசினார். அவரது உரையிலிருந்து... மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே.., மத்திய அரசு கொண்டு வந்திருக்கக் கூடிய புதிய கல்விக் கொள்கை, 2020 என்பது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சமூகங்களில் நலிந்த பிரிவினர்களை ஆரம்ப நிலையிலேயே வடிகட்டிட வேண்டுமென்ற நோக்கத்தோடு, எதிர்காலத்திலே இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நீர்த்துப்போகச் செய்ய வேண்டுமென்ற பேராபத்தோடு இந்தப் புதிய கல்விக் கொள்கைகளிலே பல்வேறு விஷயங்கள் மலிந்து கிடக்கின்றன. இதில் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட என்ற வாசகம் நீக்கப்பட்டு, சமூக, பொருளாதார சாதகமற்ற குழுக்கள், அதாவது, socio-economically disadvantaged group என்ற சொல்லாடல் இடம் பெற்றிருப்பதை நாம் எல்லோரும் கூர்ந்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இதிலே, மிகப் பெரிய சமூக பேராபத்து அடங்கியிருக்கின்றது. இந்த வாசகத்தை புரிந்துக் கொள்வோமேயானால், இந்தச் சட்டத்தை, திட்டத்தை நாம் எவ்வாறெல்லாம் எதிர்க்க வேண்டும் என்பதற்கான ஆயத்த பணிகளிலே ஈடுபட முடியும். 5-ம்
மஜக தலைவர்கள் தா.பாண்டியன் உடல் நலன் விசாரிப்பு.!
சென்னை.ஜூலை.28., சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள #இந்திய_கம்யூனிஸ்ட்_கட்சி-யின் (#CPI)மூத்த தலைவர் #தா_பாண்டியன் அவர்களை #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, #தமிழக_கொங்கு_இளைஞர்_பேரவை தலைவர் #தனியரசு_MLA, மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரஷீத், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் #ஏ_எஸ்_அலாவுதீன் ஆகியோர் சந்தித்தனர். அனைவரையும் வரவேற்ற தா.பாண்டியன் அவர்கள், நான் நலம் பெற்று வருவேன் என்று உற்சாகத்துடன் பேசினார். பிறகு அங்கு வந்த #தமுமுக பொதுச்செயலாளர் #ஹைதர்_அலி அவர்களை மஜக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை
நாகை சட்டமன்ற தொகுதியில் ஐந்து புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு விழா..! அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ப்பு..!!
நாகை. ஜூலை.27., இன்று, நாகை சட்டமன்ற தொகுதிக்கு உட்ப்பட்ட திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பனங்குடி கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் , திருமருகலில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம், வடகரை ஊராட்சி திருப்பனையூர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் திட்டச்சேரி பேரூராட்சியில் அரசு சார்பில் கட்டப்பட்ட புதிய பள்ளிக்கட்டிடம், திருமருகல் ஒன்றியம் சேஷமூலை கிராமத்தில் கட்ப்பட்ட குழந்தைகளுக்கான புதிய அங்கன் வாடி கட்டிடம் ஆகிய ஐந்து கட்டிடங்களை தமிழக கைத்தறி மற்றும் ஜவுளி துறை அமைச்சர் திரு O.S மணியன் அவர்கள் திறந்து வைத்தார்கள். நிகழ்வில் நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி, நாகை மாவட்ட ஆட்சியர் திரு. சுரேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். விழா நினைவாக அனைத்து கட்டிட திறப்பு நிகழ்வுகளிலும், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மரக்கன்றுளை நட்டனர். நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட ஏராளமான பொதுமக்கள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக் கொண்டு, விரைவில் நடவடிக்கை எடுத்து பூர்த்தி செய்வதாக தெரிவித்தார்கள். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 27.07.2018
சட்டபேரவையில் பள்ளி மாணவர்கள்…! இனிப்புகள் வழங்கினார் மஜக பொதுச்செயலாளர்…!!
சென்னை. ஜூலை.09., இன்று சட்டபேரவைக்கு சென்னை திருவல்லிக்கேணி- தாயார் சாஹிப் தெருவில் அமைந்துள்ள, #அரசு_முஸ்லிம்_உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் பேரவையின் நடவடிக்கைகளை பார்வையிட #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) ஏற்பாட்டில் வருகை தந்தனர். அவை நடவடிக்கைகளை பார்வையிட்டப்பிறகு அவர்களை சந்தித்த மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் அனைவரிடமும் அவை நடவடிக்கை பற்றி விசாரித்தார். பிறகு அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார், ஆசிரியர்களுக்கு பேனாக்களை அன்பளிப்புகளாக வழங்கினார். பிள்ளைகளிடம் "நன்றாக எல்லோரும் படிக்க வேண்டும், கவனத்தை சிதர விடக்கூடாது" என்று அறிவுரை கூறினார். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை வளாகம்