மஜக பொதுக்கூட்டம்
மஜக பொதுக்கூட்டம்
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுர பரப்புரை.! முதமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார்..!
சென்னை.மார்ச் 20, இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுர பரப்புரையை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார். சென்னை ஐஸ் அவுஸில் நடைப்பெற்ற நிகழ்வில், அங்கு நின்றிருந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும், முக கவசங்களை விநியோகித்தும் பரப்புரையை தொடங்கி வைத்தார். அவரோடு துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, இளைஞர் அணிச் செயலாளர் அசாருதீன், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் தாரிக் ஆகியோரும் பங்கேற்றனர். பிறகு பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியதாவது... கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலக பொருளாதாரமே சீர்குலைந்துள்ளது. நமது நாடும் இதில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று பிரதமர் கூறிய அறிவுரைகள் முக்கியமானது. அது போல் தமிழக அரசும் முன் எச்சரிக்கைகளை எடுத்து வருகிறது. விழிப்புணர்வு கருதி அவற்றை நாம் எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும். அதோடு மக்களும் இந்த விழிப்புணர்வு பணியில் தன்னார்வத்தோடு ஈடுபட வேண்டும். தமிழகத்தில் அரசியல் கட்சிகளில் முதலாவதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று இப்பரப்புரையை தொடங்கி உள்ளோம். போப் ஆண்டவர் இருக்கும் வாட்டிகன் தேவாலயம், புனித மெக்கா, திருப்பதி கோயில் ஆகிய இடங்களில் மக்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஹிட்லரை வீழ்த்திய கம்யூனிஸ்ட்டுகள் தான் மோடியையும் வீழ்த்த வேண்டும்..! விழுப்புரத்தில் முதமி முன் அன்சாரி MLA பேச்சு…!
மார்ச் 09, விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கெதிரான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் D.ராஜா, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நிர்வாக குழு உறுப்பினர் தா.பாண்டியன், விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் MP, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் பங்கேற்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது... இந்திய ஜனநாயகம் இன்று புற்றுநோய் அரிப்புக்கு ஆளானதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று கம்யூனிஸ்ட்டு கட்சிகள் ஹிந்தி பேசும் மாநிலங்களில் வலிமையாக இல்லாமல் போனது தான். கம்யூனிஸ்ட்டுகள் ஹிந்தி பேசும் மாநிலங்களில் வலிமையாக இருந்திருந்தால் இந்தியாவின் வரலாறு மாறி போயிருக்கும். அவர்கள் கடலோர மாநிலங்களில் ஓரளவு வலிமையாக இருப்பதால்தான், இந்திய நாடளுமன்றத்திலும், பல மாநில சட்டமன்றங்களிலும் ஜனநாயகம் உயிர் துடிப்போடு இருக்கிறது. அதற்கு கம்யூனிஸ்ட்டுகளின் முதன்மையான பங்களிப்புகள்தான் காரணம் என்பதை நாடு நன்றியோடு நினைத்துப் பார்க்கிறது. இன்று குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நாடே போராடுகிறது. இதில் எல்லா ஜனநாயக சக்திகளும் களமாட வேண்டிய தருணம் இது. நாட்டை ஃபாஸிஸ்ட்டுகளிடமிருந்து மீட்க வேண்டிய கடமை
மஜக நீலகிரி மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்!
நீலகிரி:மார்ச்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தமிமுன்அன்சாரி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாணவர் இந்தியாவின் மாநில தலைவர் ஜாவித் ஜாஃபர், அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாக விரிவாக்கம், உறுப்பினர் சேர்க்கை, போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்ட துணை செயலாளர் ஜோசப், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நீலகிரிமேற்குமாவட்டம்
MKP அமீரக பொதுக் குழு கூட்டம்..
அமீரகம்.மார்ச்.09., #மனிதநேயகலாச்சாரபேரவை அமீரக பொதுக்குழு கூட்டம் அமீரக IT Wing செயலாளர் Y.M.ஜியாவுல் ஹக் அவர்கள் இல்லத்தில் அமீரக மண்டல செயலாளர் மதுக்கூர்.S.அப்துல் காதர் அவர்கள் தலைமையிலும் , அமீரக பொருளாலர் H.அபுல் ஹசன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் அமீரக துணை செயலாளர் A.அசாலி அஹமது அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத கருப்பு சட்டங்களான NRC,NPR,CAA உள்ளிட்ட குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும், மாணவர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், பொது மக்களுக்கும் அமீரக மனிதநேய கலாச்சார பேரவை தனது முழு ஆதரவினையும், புரட்சிக்கர வாழ்த்துக்களையும் தெரிவித்தல், கடந்த ஐந்து ஆண்டுகளாக அமீரக செயலாளராக திறம்பட பணியாற்றிய சகோதரர்.மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. இறுதியாக துபை மாநகர செயலாளர் V.ஷபிகுர் ரஹ்மான் அவர்களின் நன்றியுரையோடு பொதுக்குழு நிறைவுற்றது. குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக கடந்த பிப்ரவரி 29 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், கோவையில் லட்சக்கணக்காண மக்களை திரட்டி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறிவு ஜீவிகளையும், மாணவர்