பாகம்:4
(மஜக பெதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கடந்த 08/01/2018 அன்று சட்ட மன்றத்தில் பேசிய உரையின் பகுதி பின் வருமாறு…)
கண்ணியாக்குமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கேரள அரசு உதவி செய்தது போல தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும் என நானும், அண்ணன் உ.தனியரசு MLA அவர்களும் அங்கு சென்று பார்த்து விட்டு கோரிக்கை விடுத்திருந்தோம்.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் உயிரிழந்த மீனவர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், அரசு வேலை ஒருவருக்கும் வழங்கப்படும் என கூறியிருந்தார்கள். அதற்காக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
அதேபோல் ஓகி புயலால் உயிரிழந்த அனைவருக்கும் இந்த தொகையை கொடுக்க வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
காணாமல் போண மீனவர்களை மீண்டும் தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறீர்கள். குமரி மாவட்ட மீணவர்கள் மட்டும் அல்ல கடலூர் தேவணாம்பட்டு, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்களும் அங்கிருந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே அரசு தொடர்ந்து அந்த மீனவர்களை கண்டுபிடிக்கும் பணியில் துரிதம் காட்ட வேண்டும் என்று நான் இந்த நேரத்திலேயே கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்_சென்னை
18.01.18