நாகை நகராட்சியில் இலவச குப்பை தொட்டிகள் ! நாகூரில் தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார் !

image

image

image

நாகை. அக்.28., இன்று நாகை தொகுதியில், நாகை நகராட்சி சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் குப்பைகள் மற்றும் கழிவுகளுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.

நாகூர் சிவன் கோவில் அருகே, சிவன் கோவில் குருக்கள் சிவராமன் அவர்கள் முதல் குப்பைத் தொட்டியை பெற்றுக் கொண்டார். அவருடன் கோவில் நிர்வாகிகள் ராஜா மற்றும் முருகானந்தம் ஆகியோரும் உடனிருந்தனர்.

வீடுகள் தோறும் இலவச குப்பைத் தொட்டிகள் வழங்கி, விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.

நகராட்சி சார்பில் வாகணங்கள் வரும்போது, இத்தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்ட குப்பைகளை கொட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் குஞ்ஜாலி  மரைக்காயர் தெரு, கடைத்தெரு, யானைக் கட்டி சந்து , புதுமனைத் தெரு, நாகூர் பிரதான சாலை ஆகிய இடங்களில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் சமூக ஆர்வலர் ஷேக் தாவூது மரைக்காயர், நகராட்சி ஆனையர் ஜான்சன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

வழியெங்கும் பொதுமக்கள் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகள் குறித்துக் கொள்ளப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு MLA அவர்கள் உத்தரவிட்டார்கள்.

ஆங்காங்கே சாக்கடை தேக்கங்களை சரி செய்யுமாறும், குப்பைகள் தேங்கும் இடங்களில் உடனே அதனை அகற்றுமாறும், நகராட்சி கழிப்பிடங்களை சுகாதாரமாக பராமரிக்மாறும் MLA அவர்கள் நகராட்சி ஆணையரிடம் கேட்டுக் கொண்டார்.

பின்னர் புதுமனைத் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியை சமூக ஆர்வலர் ஷேக்தாவூத் மரைக்காயர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இது அடுத்தகட்டமாக நாகப்பட்டினம் நகரத்திலும் முன்னெடுக்கப்படுகிறது.

இது ஒரு விழிப்புணர்வு பரப்புரை என்றும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இது போல் முறையாக குப்பைகளை சேகரித்து, முறையாக நகராட்சி வண்டிகளில் குப்பைகளை கொட்ட வேண்டும் என்றும், இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று  MLA அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

இந்நிகழ்வில் மஜக மாநில விவசாயகள் அணி செயலாளர் நாகை.முபாரக், தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, IT WING மாவட்ட செயலாளர் சுல்தான், புருனை மண்டல பொருளாளர் தாஹா, தொகுதி செயலாளர் தமீஜூதீன், நாகூர் நகர செயலாளர் அல்லாபிச்சை, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மஸ்தான், நாகை நகர நிர்வாகிகள் சாகுல், அஜிஸ் ரஹ்மான், பொறியாளர் சித்திக் மற்றும் சமூக நல ஆர்வலர்கள்  கலந்து கொண்டனர்.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
28.10.2017