(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை…)
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சீனியின் விலையை ரூ.13.50 யிலிருந்து ரூ.25 ருபாயாக விலை உயர்த்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஏழை,எளிய மக்களும் சாமானிய மக்களும் மிகவும் நம்பி இருக்கும் ரேஷன் கடையில் இப்படி இரண்டு மடங்காக விலையை உயர்த்திருப்பது இதற்கு முன்பு நடைபெறாத ஒர் நிகழ்வாகும்.
1ரூபாய் அல்லது 2ரூபாய் உயர்த்தினால் மக்கள் சகித்து கொள்வார்கள். இப்படி இரண்டு மடங்கு ஏற்றினால் எப்படி பொறுத்துக்கொள்வார்கள்?
சாமானிய மக்களின் அன்றாட உணவு தேவைகளின் ஒன்றுதான் சீனி.
இதில் ஏழைகளுக்கு ஒரு விலை,மற்றவர்களுக்கு ஒரு விலை என மாண்புமிகு அமைச்சர் திரு.காமாராஜ் அவர்கள் விளக்கம் அளித்திருப்பது ஏற்க கூடியதாக இல்லை.
எனவே ரேஷன் கடைகளில் சீனியின் மீதான விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
#M_தமிமுன் _அன்சாரி_MLA,
#பொதுச்_செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
28.10.2017