திருமருகல் ஒன்றியத்தில் நாகை MLA சுற்றுப்பயணம்!

image

image

image

நாகை.அக்.28., நாகப்பட்டினம் தொகுதி உப்பட்ட திருமுருகல் ஒன்றியத்தில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேற்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார்.

அம்பல் ஊராட்சியில்  நடைபெற்ற அரசு இலவச மருத்துவ முகாமை பார்வையிட்டு, குறைகளை கேட்டறிந்தார்.

அந்தப் பள்ளிக்கூடத்தில் 4 வது தொகுதி நிதியிலிருந்து புதிதாக கட்டப்படவிருக்கும் கட்டிடம் குறித்தும், பழைய கட்டிடத்தை இடிப்பது குறித்தும் தகவல் பரிமாறிவிட்டு, திருமருகல் வந்தார்.

அங்கு கடைத்தெருவில் சந்தித்த பொதுமக்களிடம் உரையாடினார். அவ்வூருக்கு மின் மயானம் ஒற்றை கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கலெக்டரிடம் பேசி ஏற்பாடு செய்வதாகவும் வாக்களித்தார்.

பிறகு பனங்காட்டூருக்கு சென்று அங்கு ஜும்மா தொழுதுவிட்டு, அவ்வூர் மக்களிடம் குறை கேட்டார். தனது தொகுதி நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய்க்கு போடப்பட்டிருக்கும் ஆழ்துளை கிணறு மூலம் அடுத்த வாரம் முதல் அவ்வூருக்கு தண்ணீர் கிடைக்கும் என்றும் கூறினார்.

அவ்வூர் மக்கள் தங்கள் ஊருக்கு ட்ரான்ஸ்பார்மர் ஒன்று அமைத்து தர வேண்டும் என்றும், பேருந்து வசதி செய்து தரப்பட வேண்டும் என்றும் கோரினார்.

உடனே மின்துறை J.E. அவர்களை தொடர்புகொண்ட MLA.உடனே ட்ரான்ஸ்பார்மர் ஒன்றை இப்பகுதிக்கு விரைந்து வழங்க கேட்டுக்கொண்டார். பிறகு பேருந்து போக்குவரத்து குறித்து போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசி, விரைவாக ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

அதற்கு பிறகு வாழ்மங்கலம் கிராமத்துக்கு சென்று அங்கு MLA நிதியிலிருந்து அமைக்கப்பட்டிருக்கும் ஆழ்துளை குடிநீர் கிணற்றை பார்வையிட்டார்.

அதன் பிறகு நாகூருக்கு புறப்பட்டு சென்றார். இந்நிகழ்வில் நாகை தெற்கு மாவட்ட மஜக செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், பொருளாளர் பரக்கத் அலி, யூசுப்தீன், முஜீப்,பிஸ்மி.யூசுப், ராதா, செல்லராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தகவல்:-
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
28_10_17