ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன் விடுதலை குறித்து தமிழக அரசு குழு அமைத்திருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது. இக்குழுவில் மனித உரிமை களத்தில் தீவிர முனைப்புடன் இருக்கும் மேலும் சிலரையும் இணைத்து, விரைவில் அதன் பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். ஆயுள் தண்டனை கைதிகளின் முன் விடுதலை என்பது சாதி, மத, வழக்கு பாராபட்சமின்றி அமைய வேண்டும் என்பதே அனைவரின் வேண்டு கோளாகும். எதிர்வரும் ஜனவரி 8 அன்று கோவை மத்திய சிறையை முற்றுகையிடவிருக்கும் எமது கவன ஈர்ப்பு போராட்டத்தில் இக்கோரிக்கையே பிரதானமாக இருப்பதால், இக்குழு தாமதமின்றி தங்களது பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 24.12.2021
அறிக்கைகள்
போலிஸ் அதிகாரி சபியாவுக்கு நீதி வேண்டும்.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 21 வயதே ஆன பெண் காவல்துறை அதிகாரியான #சபியா அவர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர் பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே துடிப்புடன், நேர்மையாக பணியாற்றினார் என்றும், ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக இயங்கினார் என்றும் பலரும் அவரை பாராட்டியுள்ளனர். இந்திலையில் அவர் மர்மமான முறையில் கடத்தப்பட்டு வெட்டுக் காயங்களுடன், மார்பகங்கள் அறுக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்திய தலைநகரில் ஒரு #பெண்_போலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்டுள்ள கொடுரத்தை நினைத்தாலே ஈரல் குலை நடுங்குகிறது. ஆனால் இந்த அராஜக நிகழ்வு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, சாதரணமான ஒரு நிகழ்வாக கடந்து செல்வது போல இருப்பது வேதனையளிக்கிறது. ஒரு பெண் போலிஸ் அதிகாரிக்கே இந்த நிலை எனில், சாதாரண பெண்களின் பாதுகாப்பு இனி என்னவாக இருக்கும் ?என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே சபியாவுக்கு நீதி கேட்டு ஜனநாயக குரல்கள் உரத்து முழங்க வேண்டும். அரசியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் முன்களத்தில் நின்று நீதிக்காக குரல் எழுப்ப வேண்டும். பொதுமக்கள் சமூக வலைதளங்கள் வழியாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். சபியாவை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்
காசநோய் பணியாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்!
#தமிழக_அரசுக்கு_மஜக_பொதுச்செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_வேண்டுகோள்! தமிழக சுகாதாரத்துறையில் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தில் கடந்த 20 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதிய பணியாளர்களாக சேவையாற்றுபவர்கள், எந்த விதமான பணி பாதுகாப்போ,மருத்துவ காப்பீடு திட்டமோ இல்லாமல் காசநோய் ஒழிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று மாத்திரை வழங்குவது, சளி பரிசோதனை மற்றும் காசநோய் பற்றிய விழிப்புணர்வு வழங்குவது என களப்பணியாற்றி வருகிறார்கள். தற்போது உள்ள கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது,கொரோனா சிகிச்சை பெற்றவர்களுக்கு வீடுகளுக்கு சென்று சளி பரிசோதனைக்கான மாதிரிகள் பெறுவது என அயராது பணியாற்றி வருகிறார்கள். இந்த இக்கட்டான சூழலில் இப்பணியாளர்களில் இதுவரை 115 நபர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி,அதில் ஒரு நபர் பலியாகி உள்ளார். எனவே அவர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் , காசநோய் துறையில் பணிபுரியும் பணியாளர்களை முன் களப் பணியாளர்களாக அறிவித்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். மேலும் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக எந்தவொரு பணிப் பாதுகாப்பில்லாமல் பணி புரியும் 1659 பணியாளர்களின் வாழ்வில் ஒளியேற்றிட, காலமுறை ஊதியத்தில் அவர்களை இணைத்திடவும் பரிசீலிக்க வேண்டுகிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 7.6.2021
மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் இராஜினாமா ஏற்பு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்த ஜிந்தா மதார் அவர்கள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்து அனுப்பிய கடிதத்தை தலைமை ஏற்றுக் கொள்கிறது. -பொதுச் செயலாளர்
உற்சாகமற்ற ஆளுநர் உரை.. மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி…!
சென்னை.பிப்.2, இன்று தமிழக சட்டசபைக்கு சென்ற மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், கலவரத்தை தூண்டும் கல்யாணராமனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற பதாகையை தூக்கி சென்றார். கவர்னர் உரையாற்றியதை அடுத்து சட்டசபையின் இன்றைய கூட்டம் நிறைவுற்றது. பிறகு வெளியே வந்த அவர் பத்திரிக்கையாளர்களிடம் கவர்னர் உரை குறித்து பேசியதாவது... கவர்னர் உரை கடந்த ஒராண்டின் பத்திரிக்கை செய்திகளின் தொகுப்பாக இருக்கிறது. சடங்கு - சம்பிரதாயப் பூர்வ உரையாக, உற்சாகமற்ற ஒரு உரையாக இருந்தது என்று கூறினார். பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலையில் மத்திய அரசு வஞ்சகம் செய்வதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பேரவை மற்றும் தமிழக அமைச்சரவையின் தீர்மானங்களை கவர்னர் தொடர்ந்து அலட்சியப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றவர், இந்த கூட்டத்தொடரில் தமிழக அரசு இதற்கு அழுத்தம் தர வேண்டும் என்றார். மேலும் ஆயுள் தண்டனை கைதிகள் முன் விடுதலையில் மெளனம் காப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் கூறினர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKITWING #சட்டப்பேரவை_வளாகம் 02-02-2021