காசநோய் பணியாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்!


#தமிழக_அரசுக்கு_மஜக_பொதுச்செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_வேண்டுகோள்!

தமிழக சுகாதாரத்துறையில் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தில் கடந்த 20 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதிய பணியாளர்களாக சேவையாற்றுபவர்கள், எந்த விதமான பணி பாதுகாப்போ,மருத்துவ காப்பீடு திட்டமோ இல்லாமல் காசநோய் ஒழிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று மாத்திரை வழங்குவது, சளி பரிசோதனை மற்றும் காசநோய் பற்றிய விழிப்புணர்வு வழங்குவது என களப்பணியாற்றி வருகிறார்கள்.

தற்போது உள்ள கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது,கொரோனா சிகிச்சை பெற்றவர்களுக்கு வீடுகளுக்கு சென்று சளி பரிசோதனைக்கான மாதிரிகள் பெறுவது என அயராது பணியாற்றி வருகிறார்கள்.

இந்த இக்கட்டான சூழலில் இப்பணியாளர்களில் இதுவரை 115 நபர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி,அதில் ஒரு நபர் பலியாகி உள்ளார்.

எனவே அவர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் , காசநோய் துறையில் பணிபுரியும் பணியாளர்களை முன் களப் பணியாளர்களாக அறிவித்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக எந்தவொரு பணிப் பாதுகாப்பில்லாமல் பணி புரியும் 1659 பணியாளர்களின் வாழ்வில் ஒளியேற்றிட, காலமுறை ஊதியத்தில் அவர்களை இணைத்திடவும் பரிசீலிக்க வேண்டுகிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி

7.6.2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.