ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலைக்கு குழு அமைப்பு… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!

ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன் விடுதலை குறித்து தமிழக அரசு குழு அமைத்திருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது.

இக்குழுவில் மனித உரிமை களத்தில் தீவிர முனைப்புடன் இருக்கும் மேலும் சிலரையும் இணைத்து, விரைவில் அதன் பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ஆயுள் தண்டனை கைதிகளின் முன் விடுதலை என்பது சாதி, மத, வழக்கு பாராபட்சமின்றி அமைய வேண்டும் என்பதே அனைவரின் வேண்டு கோளாகும்.

எதிர்வரும் ஜனவரி 8 அன்று கோவை மத்திய சிறையை முற்றுகையிடவிருக்கும் எமது கவன ஈர்ப்பு போராட்டத்தில் இக்கோரிக்கையே பிரதானமாக இருப்பதால், இக்குழு தாமதமின்றி தங்களது பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
24.12.2021