போலிஸ் அதிகாரி சபியாவுக்கு நீதி வேண்டும்.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 21 வயதே ஆன பெண் காவல்துறை அதிகாரியான #சபியா அவர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

அவர் பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே துடிப்புடன், நேர்மையாக பணியாற்றினார் என்றும், ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக இயங்கினார் என்றும் பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.

இந்திலையில் அவர் மர்மமான முறையில் கடத்தப்பட்டு வெட்டுக் காயங்களுடன், மார்பகங்கள் அறுக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்திய தலைநகரில் ஒரு #பெண்_போலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்டுள்ள கொடுரத்தை நினைத்தாலே ஈரல் குலை நடுங்குகிறது.

ஆனால் இந்த அராஜக நிகழ்வு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, சாதரணமான ஒரு நிகழ்வாக கடந்து செல்வது போல இருப்பது வேதனையளிக்கிறது.

ஒரு பெண் போலிஸ் அதிகாரிக்கே இந்த நிலை எனில், சாதாரண பெண்களின் பாதுகாப்பு இனி என்னவாக இருக்கும் ?என்ற அச்சம் ஏற்படுகிறது.

எனவே சபியாவுக்கு நீதி கேட்டு ஜனநாயக குரல்கள் உரத்து முழங்க வேண்டும்.

அரசியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் முன்களத்தில் நின்று நீதிக்காக குரல் எழுப்ப வேண்டும்.

பொதுமக்கள் சமூக வலைதளங்கள் வழியாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.

சபியாவை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருக்காக எழும் நீதியின் குரல்களில் எமது குரல் ஒங்கி ஒலிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
05.09.2021