சிறுபான்மை ஆணையர் பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்கள் தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் "சிறுபான்மை ஆணைய கலந்தாய்வு கூட்டம்" நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன் கலந்து கொண்டு மஜக சார்பாக சிறுபான்மையினருக்கு வழங்கும் கடனுதவி திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. கலந்தாய்வு நடந்த அவையிலேயே முதலமைச்சருடன் ஆலோசித்து ஒரு லட்சம் ரூபாய் கடன்களை எந்த ஆவணமுமின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆணைய தலைவர் அவர்கள் வாக்குறுதி அளித்தார். மேலும் சிறுபான்மை இளைஞர்களுக்கு சங்கம் அமைப்பது தொடர்பாகவும் கோரிக்கை வழங்கப்பட்டது. இதில் மருத்துவ அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அஹமது ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மத்திய_சென்னை 28.12.2021
கோரிக்கை
டெல்டா மண்டல மஜக செயற்குழு… வாணியம்படி வசீம் அக்ரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்..
செப் 11., மனிதநேய ஜனநாயக கட்சியின் டெல்டா மண்டல செயற்குழு கூட்டம் இன்று புறநகர் தஞ்சாவூரில், அய்யம்பேட்டை சாலையில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது. அப்போது முதல் நிகழ்வாக முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்களுக்கான இரங்கல் தீர்மானத்தை தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் அவர்கள் முன்மொழிந்தார்கள். அதன் பின் அனைவரும் ஒரு நிமிடம் மெளனமாக எழுந்து நின்று துயரை வெளிப்படுத்தினார்கள். பிறகு பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், துணைப் பொதுச் செயலாளர் மன்னை. செல்லச்சாமி அவர்களும் வசீம் அக்ரம் அவர்களின் பணிகளை பாராட்டி பேசினர். இரங்கல் தீர்மான விபரம் பின்வருமாறு... மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வாசிம் அக்ரம் அவர்கள் நேற்று படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கஞ்சா வினியோகம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் கூலிப்படை மூலம் இப் படுகொலை நடத்தப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இவ்விஷயத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட காவல் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் அவரது குடும்பத்திற்கு 20 லட்சம்
வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்கள் படுகொலை! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்கள் இன்று மாலை கொடூரமான முறையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் அப்பகுதியில் வாழும் மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பல சேவைகளை ஆற்றி வந்தவர். அம்மாவட்ட மக்களால் நன்கு அறியப்பட்டவர். மஜக-வின் பல்வேறு அரசியல் பணிகளில் துடிப்போடு பங்கேற்று செயலாற்றியவர். இன்று அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி பெரும் துயரத்தை தருகிறது. காவல்துறை துரிதமாக செயல்பட்டு உண்மை குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கட்சியினர், அவ்வூர் மக்கள் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 10.09.2021
நீலகிரியில் சட்டக்கல்லூரி நிகர் நிலைப்பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்! அமைச்சரிடம் மஜகவினர் மனு அளித்தனர்!
மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கமாலுதீன், அவர்கள் தலைமையில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், அவர்களை நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பில் நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்க கூடிய சட்டக் கல்லூரி, மற்றும் நிகர் நிலைப் பல்கலைக் கழகம், உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சரிடம் மனு அளித்தனர். இது குறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் பதிலளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் காலிப், மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீத், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ரிஸ்வான், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் தப்ரேஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நீலகிரி_கிழக்கு_மாவட்டம் 06.08.2021
மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும்!
#விருதுநகர்_மாவட்ட_ஆட்சியர்_அலுவலகத்தில்_மஜக_வினர்_மனு! கொரோனா தொற்று பரவலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண நிதியாக பத்தாயிரம் ரூபாய், வழங்க வேண்டும் என விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் கண்மணி காதர், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் காளிமுத்து, அவர்களை சந்தித்து இது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் தமிமுன்அன்சாரி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருது_நகர்_மாவட்டம் 07.06.202