செப் 11., மனிதநேய ஜனநாயக கட்சியின் டெல்டா மண்டல செயற்குழு கூட்டம் இன்று புறநகர் தஞ்சாவூரில், அய்யம்பேட்டை சாலையில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது. அப்போது முதல் நிகழ்வாக முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்களுக்கான இரங்கல் தீர்மானத்தை தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் அவர்கள் முன்மொழிந்தார்கள். அதன் பின் அனைவரும் ஒரு நிமிடம் மெளனமாக எழுந்து நின்று துயரை வெளிப்படுத்தினார்கள். பிறகு பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், துணைப் பொதுச் செயலாளர் மன்னை. செல்லச்சாமி அவர்களும் வசீம் அக்ரம் அவர்களின் பணிகளை பாராட்டி பேசினர். இரங்கல் தீர்மான விபரம் பின்வருமாறு... மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வாசிம் அக்ரம் அவர்கள் நேற்று படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கஞ்சா வினியோகம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் கூலிப்படை மூலம் இப் படுகொலை நடத்தப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இவ்விஷயத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட காவல் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் அவரது குடும்பத்திற்கு 20 லட்சம்
கண்டனம்
கோவிசீல்டு தடுப்பூசி விலை அதிகரிப்பு… மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA கண்டனம்!
கொரணா தொற்றை தடுக்க புனேயில் உள்ள #சீரம் நிறுவனம் கண்டு பிடித்த #கோவிசீல்டு என்ற தடுப்பூசியின் விலை 250 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் அது இன்று கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அரசு மருத்துமனைகளில் இலவசமாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி அது மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் 400 ரூபாய் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என்றும் விலை தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசிடம் கலந்துக்கொண்டே இம் முடிவை எடுத்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத கண்டிக்கத்தக்க முடிவாகும். உலகத்தையே மிரட்டி வரும் இந்நோய் தொற்றால் அனைவரும் கவலையடைந்துள்ளனர்.நம் நாட்டில் இதன் இரண்டாம் அலையால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய, மாநில அரசுகள் நம்பிக்கை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் உள்ள விலையை விட இது குறைவு என்றும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அந்த நாடுகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரமும், தனிநபர் வருமானமும் வேறு. அதை ஏழைகளும், நடுத்தர மக்களும் நிரம்பி வாழும் நமது நாட்டு சூழலோடு ஒப்பிடக்கூடாது. இந்த விலையேற்றம் என்பது கார்ப்பரேட் தந்திரந்தோடு கொண்டு
புதுச்சேரியில் நடைபெற்றது ஒரு ஜனநாயக சீரழிவு! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கண்டனம்!
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் நோக்கோடு நடைபெற்று வந்த சூழ்ச்சிகளின் நிறைவாக, முதல்வராக பதவி வகித்த நாராயணசாமி அவர்கள் இன்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது அரசு பெரும்பான்மையை நிருபிக்க முடியாது என தெரிந்திருந்தும், அவர் தைரியமாக பேரவையை சந்தித்து; அங்கே தனது அரசுக்கு எதிராக மத்திய அரசின் துணையோடு நடைபெற்று வந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை ஆதாரத்துடன் எடுத்துக் கூறி, அவற்றை வரலாற்று பதிவாக்கியிருக்கிறார். ஆளுங்கட்சி MLA-க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த போதே அங்கு கொல்லைப்புற வழியாக ஆட்சி கவிழ்ப்பு நடைபெற போகிறது என்பதை மக்கள் யூகிக்க தொடங்கினர். அது இன்று நடந்திருக்கிறது. இது பெரும் ஜனநாயக சீரழிவாகும். சமீப வருடங்களாக மத்தியில் உள்ள தங்களின் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி நாடெங்கிலும் நடத்தி வரும் அரசியல் தில்லு முல்லுகளை, பாஜக இங்கும் நிறைவேற்றியிருக்கிறது. இது நாள் வரை மத்திய அரசு, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோரின் நெருக்கடிகளை சமாளித்து திறன் பட ஆட்சி நிர்வாகத்தை வழிநடத்திய திரு.நாராயணசாமி அவர்களின் சாதுர்யம் பாராட்டத்தக்கது. மக்கள் தேர்வு செய்த ஒரு அரசை கவிழ்த்தவர் களுக்கு அடுத்து வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதில்