டெல்டா மண்டல மஜக செயற்குழு… வாணியம்படி வசீம் அக்ரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்..

செப் 11., மனிதநேய ஜனநாயக கட்சியின் டெல்டா மண்டல செயற்குழு கூட்டம் இன்று புறநகர் தஞ்சாவூரில், அய்யம்பேட்டை சாலையில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது.

அப்போது முதல் நிகழ்வாக முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்களுக்கான இரங்கல் தீர்மானத்தை தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் அவர்கள் முன்மொழிந்தார்கள்.

அதன் பின் அனைவரும் ஒரு நிமிடம் மெளனமாக எழுந்து நின்று துயரை வெளிப்படுத்தினார்கள்.

பிறகு பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், துணைப் பொதுச் செயலாளர் மன்னை. செல்லச்சாமி அவர்களும் வசீம் அக்ரம் அவர்களின் பணிகளை பாராட்டி பேசினர்.

இரங்கல் தீர்மான விபரம் பின்வருமாறு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வாசிம் அக்ரம் அவர்கள் நேற்று படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

கஞ்சா வினியோகம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் கூலிப்படை மூலம் இப் படுகொலை நடத்தப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

இவ்விஷயத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட காவல் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் அவரது குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அவரை இழந்து தவிக்கும், குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும், ஊர்மக்களுக்கும் எமது ஆறுதலை தெரிவிப்பதுடன், அவரது மறு உலக வாழ்வுக்காக பிரார்த்திக்கிறோம்.

மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாலை 6 மணி வரை நடத்த திட்டமிட்ட இன்றைய நிகழ்வு சுருக்கமாக இரண்டு மணி நேரத் நிகழ்வாக முடித்துக் கொள்ளப்பட்டது.

மதியம் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் , துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லசாமி ஆகியோர் வாணியம்பாடிக்கு புறப்படுவதால் இதர நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.

இச்செயற்குழுவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், துணை பொதுச்செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தார் ஷா, மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

மாநில துணைச் செயலாளர்கள் நாகை முபாரக், வல்லம் அகமது கபீர், புதுக்கோட்டை துரை முஹம்மது, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், விவசாய அணி மாநில செயலாளர் அப்துல் சலாம், விவசாய அணி மாநில துணை செயலாளர் அரசர்குளம் ஷேக் இஸ்மாயில், மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் முகம்மது மக்ரூப், மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர்பாட்சா ஆகியோரும் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையாகம்
11.09.2021