கொரணா தொற்றை தடுக்க புனேயில் உள்ள #சீரம் நிறுவனம் கண்டு பிடித்த #கோவிசீல்டு என்ற தடுப்பூசியின் விலை 250 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் அது இன்று கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
அரசு மருத்துமனைகளில் இலவசமாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி அது மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் 400 ரூபாய் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என்றும் விலை தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசிடம் கலந்துக்கொண்டே இம் முடிவை எடுத்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது ஏற்றுக்கொள்ள முடியாத கண்டிக்கத்தக்க முடிவாகும்.
உலகத்தையே மிரட்டி வரும் இந்நோய் தொற்றால் அனைவரும் கவலையடைந்துள்ளனர்.நம் நாட்டில் இதன் இரண்டாம் அலையால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய, மாநில அரசுகள் நம்பிக்கை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.
மேலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் உள்ள விலையை விட இது குறைவு என்றும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
அந்த நாடுகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரமும், தனிநபர் வருமானமும் வேறு.
அதை ஏழைகளும், நடுத்தர மக்களும் நிரம்பி வாழும் நமது நாட்டு சூழலோடு ஒப்பிடக்கூடாது.
இந்த விலையேற்றம் என்பது கார்ப்பரேட் தந்திரந்தோடு கொண்டு வரப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை.
அசாதரணமான ஒரு சூழலில் இதில் கொள்ளை லாப நோக்கம் அடங்கியிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
இதில் இடைநிலை சக்திகள் பயனடைகிறார்களா? என்ற ஐயமும் ஏற்படுகிறது.
உயிரச்சத்தில் மக்கள் வாழும் போது, மனிதாபிமானமின்றி இந்த விலையேற்றம் அறிவிக்கப்பட்டிருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம்.
மக்கள் நலன் கருதி மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு இந்த விலையேற்றத்தை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
#மு_தமிமுன்_அன்சாரி_MLA,
பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
21.04.2021