மஜக முன்னாள் மாநில துணைச்செயலாளர் புதுச்சேரி அப்துல்சமது மரணம்!பொதுச்செயலாளர் மு தமிமுன்அன்சாரி MLA இரங்கல்!


மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் பாண்டிச்சேரி அப்துல் சமது அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம்.

கட்சி தொடங்கிய நாட்களில் தீவிரமாக செயல்பட்ட அவர், தனது சொந்த ஊரான கீழக்கரையிலும் கட்சியை வளர்க்க ஆர்வம் காட்டினார்.

பொது சேவையில் அதிக ஆர்வம் கொண்ட அவர் இன்று கொரோனா வால் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.

மஜக ஒரு தீவிர ஊழியரை இழந்திருக்கிறது.

இறைவன் அவரின் பிழைகளை மன்னித்து அவரது மறு உலக வாழ்வை சிறப்பிக்க பிரார்த்திக்கிறோம்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
24.04.2021