நெல்லை மாவட்டத்தில் கடந்த 15-09-2021 அன்று இரவு பாளையங்கோட்டையில் வைத்து இந்திய தேசிய லீக் கட்சி துணை பொதுச்செயலாளர் மக்தும் அவர்களின் மகன் அப்துல்காதர் படுகொலை செய்யப்பட்டார். இத்துயர சம்பவம் அறிந்து நெல்லை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் அவர் இல்லத்திற்க்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். அச்சமயத்தில் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் படுகொலை செய்யபட்ட இளைஞரின் தந்தை மற்றும் அவரது சகோதரர் ஆகியோரிடம் படுகொலை குறித்து விசாரித்து அக்குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இதில் சட்டபடியான அனைத்து நடவடிக்கைகளிலும் மஜகவினர் உங்களுக்கு துணை நிற்போம். எந்தநேரமும் எங்களது நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுங்கள் என்றும் கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பத்தமடை கனி, மனித உரிமை பாதுகாப்பு அணி முருகேசன், டில்லி சம்சு உள்ளிட்ட நிர்வாகிகள் சென்றிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 18-09-2021
இரங்கல்
மஜக கொள்கை விளக்க அணி மாநிலச்செயலாளர் கோவை நாசர் மரணம்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் அண்ணன் கோவை .நாசர் அவர்கள் இன்று காலை மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். சமீபத்தில் உடல் நலிவுற்ற நிலையில் அவரை வீட்டில் சந்தித்தப் போது, மிகுந்த உற்சாகத்துடன் கட்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். அவர் கோவை மாநகராட்சியின் கவுன்சிலராக இருந்த போது எளிமையான அணுகுமுறைகள் காரணமாக அனைவராலும் பாராட்டப் பெற்றார். மஜக தொடங்கப்பட்ட பிறகு தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டு பேரார்வத்துடன் பரப்புரையில் ஈடுபட்டு கட்சி வளர்ச்சியில் அக்கறை காட்டினார். அதுவே அவரை கட்சியின் கொள்கை விளக்க அணியின் மாநில செயலாளராக உயர்த்தியது. மேடைகளில் கலகலப்பாக பேசி மக்களை ஈர்ப்பதில் கெட்டிக்காரராக வலம் வந்தார். சிரித்த முகத்துடன் அனைவருடனும் பழகிடும் அவரது இழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது. அன்பு மிகுந்த ஒரு மூத்த சகோதரரை நாங்கள் இழந்திருக்கிறோம். அந்த வருத்தம் வாட்டுகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், கட்சியினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இறைவன் அவரது பிழைகளை மன்னித்து மறு உலக வாழ்வில் அவரை சிறப்பித்திட பிரார்த்திக்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 03.09.2021
டெல்டா மண்டல மஜக செயற்குழு… வாணியம்படி வசீம் அக்ரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்..
செப் 11., மனிதநேய ஜனநாயக கட்சியின் டெல்டா மண்டல செயற்குழு கூட்டம் இன்று புறநகர் தஞ்சாவூரில், அய்யம்பேட்டை சாலையில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது. அப்போது முதல் நிகழ்வாக முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்களுக்கான இரங்கல் தீர்மானத்தை தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் அவர்கள் முன்மொழிந்தார்கள். அதன் பின் அனைவரும் ஒரு நிமிடம் மெளனமாக எழுந்து நின்று துயரை வெளிப்படுத்தினார்கள். பிறகு பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், துணைப் பொதுச் செயலாளர் மன்னை. செல்லச்சாமி அவர்களும் வசீம் அக்ரம் அவர்களின் பணிகளை பாராட்டி பேசினர். இரங்கல் தீர்மான விபரம் பின்வருமாறு... மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வாசிம் அக்ரம் அவர்கள் நேற்று படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கஞ்சா வினியோகம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் கூலிப்படை மூலம் இப் படுகொலை நடத்தப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இவ்விஷயத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட காவல் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் அவரது குடும்பத்திற்கு 20 லட்சம்
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மரணம்!மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவர் திரு.மதுசூதனன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து வருந்துகிறோம். நீண்ட காலமாக அதிமுகவின் முக்கிய பிரமுகராக வலம் வந்த அவரது மரணம் அக்கட்சிக்கு முக்கிய இழப்பு என்பதில் ஐயமில்லை. அவரை இழந்து வாடும் அதிமுக தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 05.08.2021
மஜகவினர் இல்லங்களுக்கு பொதுச்செயலாளர் வருகை!
ஜூலை 24., திருவாரூர் மாவட்டம் நாச்சிக்குளத்திற்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வருகை தந்தார். #பஹ்ரைன்_முன்னாள்_மண்டல செயலாளர் ஜான் மற்றும் அமீரக மண்டல செயலாளர் அசாலி அகமது ஆகியோரின் தந்தை அப்துல் சுக்கூர் அவர்களின் மறைவையொட்டி அவர்களின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார். பிறகு #குவைத்_மண்டல_முன்னாள் துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார். பிறகு #மஜக நிர்வாகிகள் ஹபிபுல்லாஹ் மற்றும் ரஷீது ஆகியோரின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரிடம் நலன் விசாரித்தார். #நாச்சிக்குளம் கிளை நிர்வாகிகளிடம் கட்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அடுத்து #முத்துப்பேட்டை சென்று அங்கு நகர மஜக நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். பிறகு முபீன் ட்ராவல்ஸ் உரிமையாளர் #முகம்மது_மாலிக் அவர்களின் தந்தையார் மறைவுக்கு ஆறுதல் கூற அவரின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவ்வூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் வருகை தந்து சால்வை அணிவித்து அவருக்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் #கோட்டைப்பட்டினம் வந்து #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி மாநில செயலாளர் ஹாரிஸ் இல்லத்துக்கு சென்று அவரது தந்தை மறைவுக்கு ஆறுதல் கூறினார். அங்கு கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் கிளை நிர்வாகிகளையும் சந்தித்து கட்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வுகளில்