ஜன.25.,
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அனைத்து கூட்டமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது.Mcom. அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அவர் பேசியதாவது இந்தியா எங்களின் தாய்மண் எங்களுக்கு குடியுரிமை தருகிறோம் வாருங்கள் என அரபு நாடுகள் அழைத்தாலும் செல்லமாட்டோம் ஏனெனில் அங்கு மன்னர் ஆட்சியின் கீழ் இருப்பதை விட எங்கள் இந்து சகோதரர்களும் கிறிஸ்தவ சகோதரர்களும் மாமன் மச்சான்கள் போல் நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்கும் இந்தியாவை மட்டுமே நேசிக்கிறோம் இருபோதும் இம்மண்ணை விட்டு செல்லமாட்டோம் எங்களை பிரிக்க நினைக்கும் மோடியும், அமித்ஷாவும், வேண்டுமானால் கைலாசா நாட்டிற்கு செல்லலாம் என பேசினார்.
இந்நிகழ்வில் YMJ தலைவர் அல்தாபி, மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உரையாற்றினர்.
மஜக சார்பில் மாவட்ட பொருளாளர் சேக், மாநில செயற்குழு உறுப்பினர் கரீம்,மாவட்ட துணைச்செயலாளர் கம்பம் கலில், கம்பம் ஒன்றிய செயலாளர் ரபீக், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அபுபக்கர் சித்திக், பெரியகுளம் நகர செயலாளர் தஸ்திக் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அசரப்ஒலி, அம்ஜத் மீரான், தேவாரம், அபுதாஹிர், ஷாஜகான், இக்ராம், அன்சர், மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தேனி_மாவட்டம்
24.01.2020