மஜக குவைத் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்.!

குவைத்.ஜனவரி.25..,

மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பாக 71-ம் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாக மாபெரும் இரத்ததான முகாம் ஜாப்ரியா மத்திய இரத்த வங்கியில் நேற்று 24.01.2020 வெள்ளிக்கிழமை மண்டலச் செயலாளர் நீடூர் முகம்மது நபீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மண்டல ஆலோசகர் இளையாங்குடி சீனி முஹம்மது அவர்கள், மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் பரங்கிப்பேட்டை ஹாஜா மக்தும் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நிகழ்வின் துவக்கமாக இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மண்டல துணைச் செயலாளர் இலங்கை மன்சூர் அவர்கள் கிராத் ஓதி துவக்கிவைக்க மண்டல துணைச் செயலாளர் ஏனங்குடி முஹம்மது பாசில் கான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்,

இந்நிகழ்ச்சியின் துவக்கம் முதலே பல்வேறு தமிழ் சார்ந்த அரசியல் கட்சி, இஸ்லாமிய சங்கங்கள், பொது நல அமைப்பு, தொண்டு நிறுவனங்கள், தமிழ் உணர்வாளர்கள் என பல்வேறு இயக்கத்தினரின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் குவைத் வாழ் தமிழர்களும் கலந்து கொண்டு ஜாதி மதம் பேதமின்றி குருதி கொடை வழங்கி மனிதநேயத்தை பறை சாற்றினர்,

குருதி கொடை வழங்கிய அனைவருக்கும் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச் செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி MA, MLA அவர்களால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ்களை வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த இரத்த தானம் நிகழ்ச்சிக்கு குவைத் MKP நிர்வாகிகளும் தொண்டரணியினரும் சரியான திட்டமிடல்களுடன் குருதி கொடை அளிப்பவர்களை வரிசைப்படுத்தி அவரவர்களுக்கு உண்டான தளத்தை சென்றடைய வழிகாட்டியதோடு சிறப்பு அழைப்பாளர்களையும் வரவேற்று கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியின் ஸ்பான்சர் WINWAY Groups நிறுவனர் முசாவுதீன் அவர்கள் குருதி கொடை அளித்தவர்களுக்கு சிறப்பு அன்பளிப்பு வழங்கி உற்சாகப்படுத்தினார், இதை போல LULU ஹைப்பர் முஜீப் மற்றும் துணைச் செயலாளர் ஆயங்குடி நாசர் அவர்கள் சார்பாக குளிர்பானங்களும், உணவும் வழங்கி குருதி கொடையின் நன்மையில் பங்கெடுத்துக்கொண்டனர்.

இறுதியாக இந்நிகழ்ச்சிற்கு மிகவும் பாடுபட்ட மண்டல மருத்துவ அணிச் செயலாளர் சுவாமிமலை ஜாஹிர் உசைன் அவர்கள் நன்றி உரையுடன் நிறைவு பெற்றது.

தகவல்;
#மனிதநேயகலாச்சாரபேரவை
#MKP_IT_WING
#குவைத்_மண்டலம்
24-01-2020