இந்தியாவின் அரசியல் சாசனத்தை நேசிப்பவர்களே போராடுகிறார்..!! மஜக பொருளாளர் பேச்சு

வந்தவாசி.ஜனவரி.25.,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், கட்சிகள் மற்றும் இயங்கள் சார்பாக பரவலாக அமைதி வழியில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக இன்று (25.01.2020) மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில்… இந்த கறுப்பு சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் மட்டும் போராடவில்லை. அனைத்து சமுதாய மக்களும், அறிவார்ந்த சமூகமும் போராடுகின்றது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இந்த சட்டத்தை அமல்படுத்த கையெழுத்திட்ட குடியரசுத் தலைவரின் கையால் கல்லூரியில் படித்த பட்டத்தைப் பெற விரும்பவில்லை என்று புறக்கணித்த ஆய்வு மாணவர்கள் சகோதரர் அருண்குமாரும், சகோதரி கிருத்திகாவும் இஸ்லாமியர்களா என்று கேள்வி எழுப்பினார்.

இதே போல், மேற்கு வங்காள மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் மாணவி டெபோஸ்மிதா சவுத்ரி அவர்கள் மேடையில் இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டு குடியுரிமை திருத்த சட்ட நகலை எடுத்து அதை துண்டு துண்டாக கிழித்து எரிந்த சகோதரி இஸ்லாமிய பெண்மணியா என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த சட்டத்தால் பாதிக்கப்படப்போவது முஸ்லீம்கள் மட்டுமல்ல அனைத்து சமுதாய மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
சந்திராயன் 2 ஆலோசகர் பிரபல விஞ்ஞானி ஜிதேந்திர கோஸ்வாமி மற்றும் அவர் குடும்பத்தினர் NRC-ல் இந்திய குடியுரிமை பறிக்கப்பட்டடுள்ளது. இஸ்லாமியர் அல்லாத குடிமக்களும் இந்த சட்டத்தால் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு இதுவே சான்று, எனவே இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த போராட்டத்தை மேலும் வீரியத்துடன் நடத்திட முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதில் மாவட்டச் செயலாளர் காஜாஷரிப், மாவட்ட துணைச் செயலாளர் சையத் அலி, மாவட்ட வணிகர் அணி பொருளாளர் ஜேஜே.ஜாகீர், செங்கம் நகர துணைச் செயலாளர் முன்னா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்கள் என பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவண்ணாமலை_மாவட்டம்
25.01.2020