திருவள்ளூர்.நவ.10, மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம் மாவட்டச் செயலாளர் அக்பர் உசேன் தலைமையில் இன்று நடைப்பெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச்செயலாளர் புதுமடம் அனீஸ் அவர்கள் கலந்துக்கொண்டு மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்த பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தின் தீர்மானமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் டெங்கு நோயிலிருந்து விடுபட மருத்துவ குணம் கொண்ட நிலவேம்பு குடிநீர் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் கட்சியை பலப்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் நகர ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்டப் பொருளாளர் பக்ருதீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் யாசீன், பஷீர் மற்றும் தகவல் தொழில்நுட்டப அணி செயலாளர் இலியாஸ், இளைஞரணி செயலாளர் கரிமுல்லா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#திருவள்ளூர்_மேற்கு_மாவட்டம்,
10-11-2019