இந்திய திருநாட்டின் 71 வது குடியரசு தின விழாவானது நம் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியை தருகிறது.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற சிறந்த பண்பாடே நமது ஜனநாயகத்தின் சிறப்பாகும்.
சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம், கல்வி உரிமை, பின்தங்கிய மக்களின் மேம்பாடு ஆகியவற்றுக்கு பாடுபடுவதே இன்றைய சமுதாய கடமையாகும்.
இந்நாளில் சிறப்புக்குரிய நமது அரசியல் சாசன சட்டத்தின் கொள்கைகளையும், மரபுகளையும் பாதுகாக்க உறுதியேற்போம்.
அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேயஜனநாயககட்சி.
25.01.2020