சென்னை.ஜனவரி.26..,
இந்தியாவின் 71-வது குடியரசு தின விழாவையொட்டி மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார்.
அப்போது சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்தும், சாதி, மத வெறி மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
தொடர்ந்து பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் “சட்டப் பாதுகாப்பு உறுதி மொழி” யை வாசிக்க, மஜக-வினர் அதை பின்பற்றி நெஞ்சில் கை வைத்து திருப்பி கூறினர்.
பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில துணைப் பொதுச் செயலாளர் மண்டலம்.ஜெய்னுலாபுதீன், மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பிஸ்மி, மேற்கு மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் சாகுல் ஹமீது, வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் அன்வர், தஞ்சை மாநகர் மாவட்டச் செயலாளர் அஹ்மது கபீர் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
26-01-2020