மஜக சார்பில் கோவையில் தேசிய கொடி ஏற்றி உறுதி மொழி ஏற்பு..! சுல்தான் அமீர் பங்கேற்பு..!

ஜன.26.,

இந்தியாவின் 71-வது குடியரசு தின விழாவை யொட்டி மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கொடியேற்று விழா, மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நடத்தப்பட்டது.

இதில் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான்அமீர், அவர்கள் கலந்து கொண்டு குனியமுத்தூர், ஆத்துப்பாலம், குறிச்சி, போத்தனூர், பெரிய கடைவீதி, உக்கடம், உள்ளிட்ட இடங்களில் தேசிய கொடியேற்றி வைத்தார்.

அப்போது சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்தும், சாதி, மத வெறி மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

தொடர்ந்து துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், அவர்கள் “சட்டப் பாதுகாப்பு உறுதி மொழி” யை வாசிக்க, மஜக-வினர் அதை பின்பற்றி கைகளை நீட்டி திருப்பி கூறினர்.

பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் குனிசை ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர் KA.பாருக், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹக்கீம், துணை செயலாளர்கள் உசேன், அன்சர், இளைஞரணி மாவட்ட பொருளாளர் பிரோஸ், துணை செயலாளர் பைசல், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், துணை செயலாளர்கள் நெளல்பாபு, ஹாருண், ஜமேஷா, கிணத்து கடவு பகுதி செயலாளர் ஹாருண் ரஷீது, பொருளாளர் அபு, துணை செயலாளர் அக்பர்அலி, தெற்கு பகுதி பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ், துணை செயலாளர் அப்பாஸ், மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாவட்டம்
26-01-2020