ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன் விடுதலை குறித்து தமிழக அரசு குழு அமைத்திருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது. இக்குழுவில் மனித உரிமை களத்தில் தீவிர முனைப்புடன் இருக்கும் மேலும் சிலரையும் இணைத்து, விரைவில் அதன் பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். ஆயுள் தண்டனை கைதிகளின் முன் விடுதலை என்பது சாதி, மத, வழக்கு பாராபட்சமின்றி அமைய வேண்டும் என்பதே அனைவரின் வேண்டு கோளாகும். எதிர்வரும் ஜனவரி 8 அன்று கோவை மத்திய சிறையை முற்றுகையிடவிருக்கும் எமது கவன ஈர்ப்பு போராட்டத்தில் இக்கோரிக்கையே பிரதானமாக இருப்பதால், இக்குழு தாமதமின்றி தங்களது பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 24.12.2021
பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி
கிழக்கு கடற்கரை சாலை மறிக்கப்பட்டது! டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி முழக்கம்!
ஒன்றிய அரசின் 3 வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக, 300 நாட்களை கடந்து தலைநகர் டெல்லியில் விவசாய சங்கத்தினரின் வழிகாட்டலில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை அற வழியில் அயராது நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் விவசாய அமைப்புகள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டக் களங்களிலும் மனித நேய ஜனநாயக கட்சி தொடர்ந்து ஈடுபாட்டுடன் பங்கேற்று வருகிறது. இந்திலையில் உத்தரப் பிரதேசத்தில் மஹா பஞ்சாயத்து என்ற பெயரில் 10 லட்சம் விவசாயிகள் பங்கேற்ற கூட்டத்தில், செப்டம்பர் 27 அன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ், CPM, CPI உள்ளிட்ட தேசி ய கட்சிகளும், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி , ராஷ்டீரியா ஜனதா தளம், போன்ற பெரிய மாநில கட்சிகளும் ஆதரவளித்தன. தமிழகத்தில் மனித நேய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியனவும் பகிரங்க ஆதரவை வெளிப்படுத்தின. இன்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் பல இடங்களில் இந்த பந்துக்கு ஆதரவு தெரிவித்து தனித்து ஆர்ப்பாட்டங்களை பரவலாக நடத்தி வருகின்றனர். இது தவிர தமிழகமெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் CPM, CPI ஆதரவு விவசாய
திருச்சி மஜக நிர்வாகி இல்ல திருமண விழா! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகி ரபீக் அவர்களின் மகள் ஷாஜிதா, மணமகன் சைபுல்லாஹ், திருமணம் கோல்டன் மஹாலில் நடைபெற்றது. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் அகமது கபீர், மாவட்ட செயலாளர் பேரா. மைதீன், பொருளாளர் அந்தோணி ராஜ், துணை செயலாளர்கள் சையது முஸ்தபா, முஹம்மது பீர்ஷா, அன்வர் பாஷா, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஷேக் இப்ராகிம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது அகமது, மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருச்சி_மாவட்டம் 24.09.2021
நீட் எதிர்ப்பு போராட்டம்! இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது தமிழகம்! மே17 இயக்க போராட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி!
செப்:20., தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மே 17 இயக்கம் சார்பில் ஒன்றிய அரசு அலுவலகமான சாஸ்த்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு அவ்வியக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையேற்று வழி நடத்தினார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியினரும் திரளாக பங்கேற்றனர். அப்போது மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழகத்தில் மட்டும் தானே நீட் தேர்வுக்கு எதிராக போராடுகிறீர்கள்? என ஒன்றிய அரசு கேட்கிறது. தமிழகத்தில் தான் சிந்திக்கும் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். எனவே தான் இந்த அநீதிக்கு இங்கு போராட்டம் நடக்கிறது. இது இந்தியாவுக்கே வழிகாட்டும் என்றார். இக்களத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தோழர் பிரவீன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சகோ.ஷெரிப், தமிழ் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பேரறிவாளன் ஆகியோருடன், மஜக இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான், மத்திய சென்னை மேற்கு மாவட்ட
பாளையில் படுகொலை! அப்துல்காதர் குடும்பத்தாருக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி ஆறுதல்.!
நெல்லை மாவட்டத்தில் கடந்த 15-09-2021 அன்று இரவு பாளையங்கோட்டையில் வைத்து இந்திய தேசிய லீக் கட்சி துணை பொதுச்செயலாளர் மக்தும் அவர்களின் மகன் அப்துல்காதர் படுகொலை செய்யப்பட்டார். இத்துயர சம்பவம் அறிந்து நெல்லை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் அவர் இல்லத்திற்க்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். அச்சமயத்தில் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் படுகொலை செய்யபட்ட இளைஞரின் தந்தை மற்றும் அவரது சகோதரர் ஆகியோரிடம் படுகொலை குறித்து விசாரித்து அக்குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இதில் சட்டபடியான அனைத்து நடவடிக்கைகளிலும் மஜகவினர் உங்களுக்கு துணை நிற்போம். எந்தநேரமும் எங்களது நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுங்கள் என்றும் கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பத்தமடை கனி, மனித உரிமை பாதுகாப்பு அணி முருகேசன், டில்லி சம்சு உள்ளிட்ட நிர்வாகிகள் சென்றிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 18-09-2021