#விருதுநகர்_மாவட்ட_ஆட்சியர்_அலுவலகத்தில்_மஜக_வினர்_மனு! கொரோனா தொற்று பரவலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண நிதியாக பத்தாயிரம் ரூபாய், வழங்க வேண்டும் என விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் கண்மணி காதர், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் காளிமுத்து, அவர்களை சந்தித்து இது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் தமிமுன்அன்சாரி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருது_நகர்_மாவட்டம் 07.06.202
கொரோனா வைரஸ்
ஈரோட்டில் கொரோனா தொற்று காரணமாக மரணித்தவரின் உடலை நல்லடக்கம் செய்த மஜகவினர்!!
ஈரோடு:செப்.09., ஈரோடு மாநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் (பெண்) வயது 58, வீரப்பன்சத்திரம் இறந்ததாகவும், அவரை தாங்கள் கண்ணியமாக அடக்கம் செய்ய உதவ வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளுக்கு இறந்தவரின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து மஜக ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஷபீக், அவர்கள் தலைமையில் இறந்தவர் உடலை உலக சுகாதார நிறுவனம் மற்றும் ICMR வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி இறந்தவரை கண்ணியமான முறையில் அடக்கம் செய்தனர். ஈரோட்டில் கொரோனா தொற்றினால் இறந்தவரின் உடலை கண்ணியமான முறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தன்னார்வலர்கள் அடக்கம் செய்த இந்த உதவிக்கு உயிரிழந்தவரின் குடும்பத்தினர் நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஈரோடு_கிழக்கு_மாவட்டம் 09.09.2020
கொரானாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த மஜகவினா்!!
ஆகஸ்ட்.31., சென்னை காவேரி மருத்துவமனையில் கொரோனா தொற்றில் சிகிச்சை பெற்று வந்த சகோதரா் சிகிச்சை பலன்றி உயிரிழந்தாா். இறந்தவரின் உடலை மஜக மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளா் அப்துல்ரஹ்மான், அவர்கள் தலைமையில் ஆசிக், அலி, அமீன், ஆகியோா் உடலை பெற்று அவர்களின் மத வழக்கப்படி இறுதி மரியாதை செய்தனர். மஜக வினரின் இந்த மனிதநேய சேவைக்கு அவர்களது குடும்பத்தினர் நன்றி கூறினர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 30.08.2020
தூத்துக்குடி மஜக சார்பில் மூன்றாம் கட்ட நிவாரணம் வழங்கல்
மே.21, மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மூன்றாம் கட்டமாக இன்று ஆழ்வார்திருநகரி ஒன்றியத்திற்குட்பட்ட குருகாட்டூர், கோட்டூர், இராஜங்காபுரம், முத்துராமலிங்கபுரம், கல்லாம்பாறை ஆகிய ஊர்களில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கும் கேம்பலாபாத்தை சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்களின் பங்களிப்பில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. மஜக வின் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் குருகை R.ராசுகுட்டி அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது. மாவட்ட விவசாய அணி செயலாளர் R.ஜெயசீலன், ஆழ்வை ஒன்றிய செயலாளர் ஆசிர் ராஜ்குமார் மற்றும் மஜகவினர் உடனிருந்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #தூத்துக்குடி_மாவட்டம். 21.05.2020
குவைத்தில் பரிதவிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்!
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தையும், கேரளத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். உலகின் மற்ற நாடுகளைப் போலவே குவைத்திலும் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி வரும் நிலையில், அங்கும் வேலை இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதனால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் வாடுகின்றனர். அவர்களில் உரிய ஆவணம் இன்றி பணியாற்றி வரும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. அவர்களுக்கு வேலையோ, தங்குமிடமோ இல்லாத நிலையில், அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் திட்டத்தை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை குவைத் செயல்படுத்தியது. அதற்கு விண்ணப்பித்தோரில் 7340 இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கு தற்காலிக இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டு, எந்த நேரமும் இந்தியா திரும்ப வசதியாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்காமல் தெருக்களில் உணவின்றி வாடி வந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு சிறப்பு சலுகையாக நேற்று பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு பொது மன்னிப்பு பெற்றவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழர்கள் உள்ளிட்ட 7340 இந்தியர்களும் தாயகம் திரும்புவதற்காக ஒரு மாதத்திற்கும்