மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு கிழக்கு மாவட்ட இளைஞர் அணியின் ஆலோசனை கூட்டம் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் திலீப் குமாா், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்சா, மாவட்ட செயலாளர் சபீக் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் இஹ்சானுல்லாஹ், ஆகியோர் பங்கேற்று ஜன 8 கோவை சிறை முற்றுகை போராட்டத்தில் இளைஞரணியின் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும் வீடு தோறும் சென்று துண்டு பிரசுரம் மூலம் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பது எனவும், திரளான மக்களை இந்த போராட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில் அக்ரஹார பகுதி செயலாளா் பொறியாளா் ஜாவித், இளைஞரணி உசேன், தினகரன், பூபதி, இப்ராஹிம், மா பாஷா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisnors தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_கிழக்கு_மாவட்டம் 27.12.2021
இளைஞர் அணி
சிறுபான்மையினர் கடன் உதவி திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும்..! மஜக இளைஞரணி மாநில செயலாளர் கோரிக்கை.!
சிறுபான்மை ஆணையர் பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்கள் தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் "சிறுபான்மை ஆணைய கலந்தாய்வு கூட்டம்" நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன் கலந்து கொண்டு மஜக சார்பாக சிறுபான்மையினருக்கு வழங்கும் கடனுதவி திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. கலந்தாய்வு நடந்த அவையிலேயே முதலமைச்சருடன் ஆலோசித்து ஒரு லட்சம் ரூபாய் கடன்களை எந்த ஆவணமுமின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆணைய தலைவர் அவர்கள் வாக்குறுதி அளித்தார். மேலும் சிறுபான்மை இளைஞர்களுக்கு சங்கம் அமைப்பது தொடர்பாகவும் கோரிக்கை வழங்கப்பட்டது. இதில் மருத்துவ அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அஹமது ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மத்திய_சென்னை 28.12.2021
மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்!!
வேலூர்.ஆக.30, மனிதநேய ஜனநாயக கட்சி-யின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்கள் தன்னெழுச்சியாக மஜக-வில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாவட்டம் இளைஞர் அணி செயலாளர் அமீன், துணைச் செயலாளர் சாதிக் முன்னிலையில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட மருத்துவ அணி துணைச் செயலாளர் அன்சர், ஹயாத், அலி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 30-08-2020
மஜக வில் இணைந்த இளைஞர்கள்..!
சென்னை.மார்ச்.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக இளைஞர்கள் தங்களை மஜக-வில் இணைத்துக் கொள்கின்றனர். சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள மாற்று கட்சியை சேர்ந்த H.முஹம்மது ரஹ்மத்துல்லாஹ், G.புரோஸ்கான், GK. சமி, I.முஹம்மத் முஸ்தபா, S பிரோஸ் கான், A. செய்யது அலீம் ஆகியோர் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., முன்னிலையில் மஜக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். உடன் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லா கான், மாவட்ட துணைச்செயலாளர் ரவூப் ரஹீம், எழும்பூர் பகுதி நிர்வாகி அப்துல் கலாம், புதுப்பேட்டை பஷீர் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்தியசென்னைகிழக்கு_மாவட்டம் 11-03-2020
மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞரணி தலைமையக அறிவிப்பு..!
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 வரை அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய தவறிய வர்களுக்கு . மீண்டும் பதிவு செய்யலாம் என அரசு வேலை வாய்ப்பு பயிற்ச்சி துறை அறிவித்துள்ளது பதிவு செய்ய கடைசி நாள் ஜனவரி 25.01.2019 இடம்: அனைத்து மாவட்ட அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்கள். ஆகவே சகோதர, சகோதரிகள், இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவண் மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞரணி தலைமையகம் தொடர்புக்கு. 99403 11477, 99520 38767.