You are here

வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்கள் படுகொலை! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்கள் இன்று மாலை கொடூரமான முறையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அவர் அப்பகுதியில் வாழும் மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பல சேவைகளை ஆற்றி வந்தவர். அம்மாவட்ட மக்களால் நன்கு அறியப்பட்டவர்.

மஜக-வின் பல்வேறு அரசியல் பணிகளில் துடிப்போடு பங்கேற்று செயலாற்றியவர்.

இன்று அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி பெரும் துயரத்தை தருகிறது.

காவல்துறை துரிதமாக செயல்பட்டு உண்மை குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கட்சியினர், அவ்வூர் மக்கள் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
10.09.2021

Top