வேலூர்.ஏப்.17., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி 2_ம் மண்டல செயலாளர் சையத் கலீம் தலைமையில் நடைப்பெற்றது. 3_ம் மண்டல நிர்வாகிகள் முஹம்மத் பாயிஸ், ஷேக் இம்ரான், அஸ்கர் அலி, ரிஸ்வான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முஹம்மத் யாஸீன் அவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர், வெள்ளரி, தர்பூசணி ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சையத் உசேன், மருத்துவ சேவை அணி செயலாளர் சையத் காதர், இளைஞர் அணி துணை செயலாளர் சாதிக், 30வது கிளை துணை செயலாளர் அமானுல்லாஹ், அப்சர் பாஷா, முஜாயத், சல்மான் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 17.04.2018
மஜக கர்நாடகா – MJK KARNATAKA
வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்!
வாணியம்பாடியில் ஜாமியத்துல் உலமா மற்றும் மஜ்லிஸூல் உலமா அமைப்புகள் இணைந்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் முத்தலாக் மசோதாவை திரும்ப பெற வலுயுறுத்தியும், பாஜகவின் அரசியல் சாசன விரோதம் போக்கையும் கண்டித்து பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ்) ப.ழ. கருப்பையா (திமுக) M.தமிமுன் அன்சாரி MLA (மஜக), வழக்கறிஞர் அந்திரிதாஸ் ( மதிமுக), அபுபக்கர் MLA (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லவி ரஹமத்துல்லா (அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்), அப்துல் சமது(மனிதநேய மக்கள் கட்சி), சையது அஹ்மத் ஹீசைனி (வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா), முகம்மது ஆசாத்(SDPI), இனாமுல் ஹக் சாயபு (ஜாமியத் உலமா), சையத் அப்துல் ரஹ்மான் (நகர தலைமை காஜி) உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் 1500 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம். 12.01.18
பெங்களூரு வருகை தந்த TTV.தினகரன் அவர்களுடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு..!
பெங்களூர்.டிச.28., கர்நாடகா மாநிலம் பெங்களூர் வருகை தந்த திரு.TTV. தினகரன் MLA அவர்களை மனிதநேய ஜனநாய கட்சி (மஜக) பெங்களூரு நிர்வாகிகள், மாநகரச் செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். திரு.தினகரன் அவர்களுக்கு கர்நாடகா மஜக பெங்களூரு மாநகர செயலாளர் K.M.J.பாபு பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார். உடன் மஜக கர்நாடகா பெங்களுரு மாநகர பொருளாளர் சல்மான் துணைச்செயலாளர் A.அக்கிம் சேட் , தகவல் தொழில்நுட்பம் அணி துணை செயலாளர் அந்தோனி தாஸ் மற்றும் மஜக செயல்வவீரர்கள் உடன் இருந்தனர். இச்சந்திப்பில் RK.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இமலாய வெற்றி பெற்றதர்க்கு கர்நாடக மஜக சார்பாக வாழ்த்துக்கள் கூறினர். அச்சமயம் திரு TTV.தினகரன் அவர்கள் வரும் காலங்களில் கர்நாடக மஜக சிறப்பாக செயல்படவும், பெரும் வளர்ச்சி பெறவும் கர்நாடக பெங்களூர் மாநகர செயலாளர் K.M.J.பாபுவிடம் வாழ்த்து கூறினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_KARNATAKA #MJK_IT_WING 28-12-2017
பெங்களூரில் மே17 இயக்கம் சார்பில் அரங்க கூட்டம்..! கர்நாடகா மஜகவினர் பங்கேற்பு..!!
பெங்களூரு.டிச.10., இன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் மே17 இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் " தமிழர் உரிமையும், தற்சார்பு தமிழ்நாடும் " என்ற தலைப்பில் அரங்க கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சி (MJK) கர்நாடக மாநிலம் பெங்களூர் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதில் கலந்து கொண்ட மஜக பெங்களூரு மாநகர் செயலாளர் KMJ. பாபு அவர்கள் தோழர். திருமுகன் காந்தி அவர்களுக்கு மரியாதை நிமித்தமாக பொன்னாடை போர்தினார். இந்நிகழ்வில் மாநகர் பொருளாளர் J.சல்மான், துணை செயலாளர் A.அக்கீம் சேட், தகவல் தொழில்நுட்ப செயலாளர் தன்வீர், தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அந்தோனி தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #MJK_KARNATAKA
மஜக பெங்களூரு மாநகர செயல்வீரர்கள் கூட்டம் மாநில பொருளாளர் பங்கேற்பு..!
#மஜக_பெங்களூரு_மாநகர_செயல்வீரர்கள்_கூட்டம்_மாநில_பொருளாளர்_பங்கேற்பு..! பெங்களூர். டிச.02., மனிதநேய ஜனநாயக கட்சி கர்நாடக மாநிலம் பெங்களூரு நகர செயல்வீரர்கள் கூட்டம் இன்று 02/11/17 ஏர்ப்போர்ட் ரோடு பகுதியில் மாவட்ட செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகர துணை செயலாளர் ஹக்கிம் வரவேற்புரை நிகழ்த்தினார்கள், மாநகர பொருளாளர் J.சல்மான் முன்னிலைவகிக்க, மாநகர துணைச்செயலாளர் SBS.சாகுல்ஹமீது தொகுப்புரை வழங்க, இக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com, தலைமை நிர்வாககுழு உறுப்பினர் மவ்லவி J.S.ரிஃபாயி ரஷாதி ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சியுரை நிகழ்த்தினார்கள். இதில் பேசிய மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பாபர் மசூதி வரலாறு பற்றியும், மசூதி இடிப்பு நடைபெற்றதை பற்றியும், மகஜவின் போராட்டங்கள் பற்றியும் விளக்கமாக கூறினார்கள். மேலும் இந்த டிசம்பர்-6 அன்று இஸ்லாமிய சொந்தங்கள் மட்டுமல்லாது மாற்றுமத சகோதரர்கள், தோழமை கட்சி நிர்வாகிகளையும் அழைத்து போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று கூறினார்கள். இதில் KMMT மாநில தலைவர் முக்தார் அஹ்மத், திப்பு கிராந்தி சேனா மாநில இளைஞர் அணி தலைவர் காலித் கான், K.G ஹல்லி வியாபாரிகள் சங்க தலைவர் அய்யூப் கான்,