குவைத்.ஆக.23., குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை #MKP சார்பாக 75வது இந்திய #சுதந்திர_தின பவள விழாவை முன்னிட்டு இந்திய எனும் சிந்தனை என்ற தலைப்பில் காணொளி கருத்தரங்கம் கடந்த 20-08-2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் துவக்கமாக மண்டல தொண்டரணி செயலாளர் ஆயங்குடி அபுல் உசேன் அவர்கள் நீதிபோதனை நிகழ்த்தி துவக்கி வைக்க ரிக்கை கிளை செயலாளர் நாச்சியார்கோயில் சுல்தான் ஆரிப் அவர்கள் வரவேற்புரை நிகழ்தினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் கர்நாடக ஆட்சியருமான தோழர் சசிகாந்த் செந்தில் IAS அவர்கள் மற்றும் மஜகவின் மாநில துணை செயலாளர் சகோ. புதுமடம் அனீஸ் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர் முதலில் உரையாற்றிய தோழர் சசிகாந்த் செந்தில் IAS அவர்கள், அவரது உரையில் இந்திய என்பது பல்வேறு மதம் மொழி கலாச்சாரம் உள்ளடக்கிய நாடு இதில் அனைவரும் எந்த பாகுபாடுமின்றி இந்தியர் என்ற சிந்தனையில் ஓரணி சேரவேண்டும் என்றும் பாசிசம் போற்றும் மதரீதியிலான பிரிவினைகளை களைந்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவோம் என்று
மனிதநேய கலாச்சார பேரவை
மனிதநேய கலாச்சார பேரவை
மலேசியாவில் தமிழகத்தை சேர்ந்தவர் மரணம்.. தீவிர கிசிச்சைக்கு உதவி செய்த MKP!
மலேசியாவில் கொரோனாவில் பாதிக்கபட்டு தீவிர சிகிச்சையில் இருந்த தமிழகத்தை சேர்ந்த வீரராகவன் என்ற சகோதரர் நேற்றைய தினம் இறந்து விட்டார். முன்னதாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கபடுவது குறித்தான தகவல் மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாட்டு சார்பு அமைப்பான கத்தார் மண்டல மனிதநேய கலாச்சாரப் பேரவைக்கு கிடைத்தது. கத்தார் மண்டல செயலாளர் யாஸின் அவர்கள் மலேசியாவில் உள்ள ஜொகுர் மண்டல மனிதநேய கலாச்சாரப் பேரவையின் பொருளாளர் சகோதர் சுல்தான் அவர்களை தொடர்புகொண்டு இது குறித்த விபரம் தெரிவிக்கபட்டது. சகோதரர் சுல்தான் அவர்கள் மருத்துவமனையை தொடர்புகொண்டு நிலைமையை அறிந்து தொடந்து கிசிச்சையை கண்காணித்து வந்தார் மேலும் தீவிர சிகிச்சைக்கான பணிகளையும் முன்னெடுத்தார். எனினும் வீரராகவன் இறந்து விட்டார். அவரது இறுதி நிமிடங்களில் மலேசிய MKP சொந்தங்கள் ஆற்றிய சேவையை அக்குடும்பத்தினர் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர். தகவல்;. #மனிதநேய_கலாச்சார_பேரவை ஜொஹர் (மலேசியா) கத்தார் மண்டலங்கள் 12.09.2021
குவைத் மண்டல தியாக திருநாள் கலந்துரையாடல்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாளை முன்னிட்டு காணொளி கருத்தரங்கம் 20-07-2021 செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. துவக்கமாக மண்டல மருத்துவ அணி செயலாளர் சுவாமிமலை ஜாஹிர் உசேன், அவர்கள் நீதிபோதனை நிகழ்த்தி துவக்கி வைத்தார். ஊடகதுறை இணை செயலாளர் திருக்கோவிலூர் சலீம் ஷா, அவர்கள் வரவேற்புரை நிகழ்தினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MA Ex.MLA அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள் அவரது உரையில், தற்போது உள்ள கொரோனா நோய் தொற்றிலிருந்தும் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் அனைவரும் தங்களையும், தங்களது குடும்பத்தாரையும் பாதுகாத்து கொள்ளும்படியும், சூழல் விரைந்து சீர்பெற வேண்டி பிரார்த்திக்கும்படி கேட்டு கொண்டார். கொரோனா இரண்டாவது பேரலையில், மஜக வினர் ஆம்புலென்ஸ் சேவைகள்,ஆக்ஸிஜன் சிலிண்டர் வினியோக சேவைகள், நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கல், ஏழை பயனாளிகளை தேடி சென்று உதவுவதல் என உளத்தூய்மை யோடு பணியாற்றி யதை விபரமாக கூறினார். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்ப தாகவும், இந்த அரசு
கத்தார் மண்டல பெருநாள் சந்திப்பு..! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்பு!
மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலம் சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி காணொளி வழியே நடைபெற்றது. கடந்த வெள்ளி மாலை 7.30 மணியளவில் கத்தார் மண்டல செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசின் தலைமையில் காணொளி (Zoom) மூலம் நடைபெற்ற நிகழ்வில் மண்டலத்தின் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி Ex. MLA அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கீழக்கரை ஹுசைன், உத்தமபாளையம் உவைஸ், மற்றும் மண்டல துணைச் செயலாளர்கள் சிதம்பரம் நூர் முஹம்மது, பரங்கிபேட்டை அப்துல் ரசாக், திருச்சி நஜிர் பாஷா, மேலப்பாளையம் அல் பத்தாஹ், பரங்கி பேட்டை பாருக், மற்றும் மண்டல IT Wing செயலாளர் மேலப்பாளையம் ஜுபைர்,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொதுச்செயலாளர் ஈகை திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து, நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். கத்தார் மண்டம் சார்பாக நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். கொரோனா கால கட்டத்தில் நிர்வாகிகளின் பணிகளை பாராட்டினார். அடுத்த கட்ட பணிகளை தொடந்து முன்னெடுக்க அறிவுரை வழங்கினார். முதிர்ச்சியான மஜக வின் அணுகு முறைகளும், முற்போக்கு அரசியலும் மக்களால் வரவேற்கப்படுவது குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கினார். பதவிக்காக நமது அரசியல் பயணம் இல்லை என்பதையும்,
கத்தாரில்_சிக்கி தவித்த தமிழர்களை மீட்ட MKP நிர்வாகிகள்
தோஹா.மே.28., கத்தாரில் நெல்லை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 5 நபர்கள் வேலைதேடி வந்த இடத்தில் ஏஜன்டால் ஏமாற்றபட்டு தனது ஸ்பான்ஸரும் கைவிட்ட நிலையில் ஓரு வாரமாக சரியாக உணவின்றி, தங்க இடமின்றி தவித்து வந்தனர். தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹூசைன் மற்றும் மஜக அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் கத்தார் மண்டல துணைச் செயலாளர் கஃதீர் ஆகியோர் கைவிடப்பட்ட நபர்கள் இருந்த இடத்திற்கு சென்று அவர்களை சந்தித்து. உடனே அந்த 5 நபர்களையும் இந்திய தூதரகத்திற்கு அழைத்துச் சென்று முறையாக புகார் அளித்துவிட்டு தாயகம் அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளை செய்தனர் மேலும் அவர்கள் தாயகம் செல்லும் வரை உணவு மற்றும் தங்குமிடம் போன்ற ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர். நெல்லை அப்துல் அஜீஸ் உடனிருந்தார். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்_மண்டலம் 29.5.2020