தென்காசி மாவட்டம் வாவாநகரம் இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. இதில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வினியோகிக்கப்பட்டது தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #தென்காசி_மாவட்டம் 24-05-2020
இரண்டாம் ஆண்டில் மஜக
இரண்டாம் ஆண்டில் மஜக
வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்!
வாணியம்பாடியில் ஜாமியத்துல் உலமா மற்றும் மஜ்லிஸூல் உலமா அமைப்புகள் இணைந்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் முத்தலாக் மசோதாவை திரும்ப பெற வலுயுறுத்தியும், பாஜகவின் அரசியல் சாசன விரோதம் போக்கையும் கண்டித்து பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ்) ப.ழ. கருப்பையா (திமுக) M.தமிமுன் அன்சாரி MLA (மஜக), வழக்கறிஞர் அந்திரிதாஸ் ( மதிமுக), அபுபக்கர் MLA (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லவி ரஹமத்துல்லா (அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்), அப்துல் சமது(மனிதநேய மக்கள் கட்சி), சையது அஹ்மத் ஹீசைனி (வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா), முகம்மது ஆசாத்(SDPI), இனாமுல் ஹக் சாயபு (ஜாமியத் உலமா), சையத் அப்துல் ரஹ்மான் (நகர தலைமை காஜி) உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் 1500 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம். 12.01.18
அதிராம்பட்டினத்தில் மஜக எழுச்சி பொதுக்கூட்டம்!
தஞ்சை.ஏப்.29., தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர் கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நேற்று 28-04-2017 வெள்ளிக்கிழமை மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் அதிரை பேரூந்து நிலையத்தில் மாவட்ட செயலாளர் வல்லம் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது. நூருல் அமீன் ரஹ்மானி அவர்கள் நீதிபோதனை வழங்க நகர செயலாளர் முகம்மது செல்ல ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் தஞ்சை ஜப்பார், அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர், மாவட்ட நிர்வாகிகள், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, மதுக்கூர் கிளைகளின் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, மாநில துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், முன்னாள் மாநில அமைப்புச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாநில இளைஞர் அணி செயலாளர் ஷமீம் அஹமது உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியினை குவைத் மண்டல செய்தி தொடர்பாளர் அப்துல் சமது தொகுத்து வழங்கினார். இறுதியாக நகர பொருளாளர் சாகுல் ஹமீது நன்றி உரை ஆற்றினார். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING தஞ்சை தெற்கு மாவட்டம் 28-04-2017
திருப்பூர் மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு விழா!
திருப்பூர், ஏப் :24., திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் அலுவலகம் திறப்பு மற்றும் கட்சி கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் திருப்பூரில் கொடியேற்றி வைத்து புதிய மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில இணை பொதுசெயலார் மைதீன் உலவி, துணை பொதுசெயலாளர் ஈரோடு பாருக், மாநில செயலாளர் கோவை சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, கொள்கை விளக்க செயலாளர்கள் கோவை நாசர், திருப்பூர் ஹைதர்அலி, விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர் . இதில் கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும், அதிகபடியாக உறுப்பினர் சேர்பது எனவும் முடிவு செய்யபட்டது. தகவல் :- தகவல் தொழில் நுட்பஅணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING திருப்பூர் மாவட்டம் 23.4.2017.
திருப்பூர் மஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..! மாநில செயலாளர் பங்கேற்ப்பு..!!
திருப்பூர்.ஏப்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் J.பஷீர் அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயலாளர் A.K.சுல்தான் அமீர் அவர்கள், மாநில பேச்சாளர் ஹைதர் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் P.M.இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக A.T.R.பதுர்தீன் அவர்கள் கலந்து கொண்டார்கள். ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. தொழிலில் ஏற்பட்ட நலிவின் காரணமாக கட்சி மாவட்ட துணை செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறிய கண்ணன் அவர்களிடம். தொழில் பாதிப்பு ஏற்படாமல் கட்சி பணியாற்றி சமூகத்திற்கு பணியாற்ற மாநில செயலாளர் சுல்தான் அவர்கள் அறிவுறித்தினார்கள். இதையடுத்து ராஜினாமா முடிவை திரும்ப பெற்று பொறுப்பில் இருந்து பணியாற்றுவதாக கண்ணன் அவர்கள் உறுதியளித்தார். நிர்வாகிகள் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1.தற்போது இருக்கும் நிர்வாகம் கட்சி பணியில் மிகுந்த வீரியத்தோடும் சிறப்பாகவும் செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 2.இனி தொடர்ந்து மாதம் 20.முதல் 28ம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 3.வரும் ஞாயிற்றுக்கிழமை 23.4.2017 அன்று மாலை மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமீமுன் அன்சாரி MLA அவர்களை அழைத்து திருப்பூர்