சென்னை.ஜன.02., இன்று தமிழக முதல்வர் திரு. எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் அவரின் கீரின்வேஸ் சாலை இல்லத்தில் இன்று காலை11மணியளவில் சந்தித்தனர்.
அப்போது10ஆண்டுகளை நிறைவுசெய்த ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்வது தொடர்பாக தங்களின் கோரிக்கையை ஏற்று, திண்டுக்கல்லில் நடைபெற்ற MGR நூற்றாண்டு விழாவில் அறிவிப்பு செய்ததற்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
இதில் ராஜிவ் படுகொலை வழக்கு கைதிகள், கோவை குண்டு வெடிப்பு கைதிகள், மாவோயிஸம், நெக்ஸ்லைட்டு, தமிழ் தேசியம் தொடர்பான வழக்குகளில்.தண்டனை பெற்ற கைதிகள் ஆகியோரையும் பட்டியலில் இணைத்து விடுதலை செய்ய வேண்டும் என்று 3 MLAக்களும் விரிவாக எடுத்துரைத்தனர்.
இதில் உள்ள சட்ட சிக்கல்கள், உச்சநீதிமன்ற வழிகாட்டல்கள் ஆகியவை குறித்து கவனத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கவும், இக்கோரிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிப்பதாகவும் முதல்வர் கூறினார்.
மேலும் ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கு 10 கோடி நிதி வழங்கியதற்கும் சி.பா. ஆதித்தனாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை பாடப்புத்தகத்தில் சேர்த்ததற்கும் முத்தலாக் குறித்து தமிழக அரசின் சார்பில் தெளிவாக முடிவெடுத்ததற்கும் 3 MLAக்களும் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
மேலும் முத்தலாக் குறித்து மாநிலங்களவையிலும் அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டபோது நிச்சயம் எதிர்ப்போம் என்றும் அதை பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்புமாறு கோறுவோம் என்றும் முதல்வர் கூறினார்.
சிறைக்கைதிகள் சுமார் 1400 பேர் முன் விடுதலை செய்வது குறித்து தாங்கள் எடுத்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது என்றும் 3 MLAக்களும் முதல்வரை பாராட்டி சால்வை அணிவித்தனர்.
பிறகு வெளியே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அப்போது சிறைக்கைதிகள் விடுதலை குறித்து கேள்விகள் எழுந்தது தீவிரவாதிகள் என கூறப்பட்ட சாரு மஜீம்தார், தோழர் தியாகு, போன்றவர்களை பல மாநில அரசுகள் ஏற்கனவே பொதுமன்னிப்பில் விடுதலை செய்திருப்பதை 3 பேரும் சுட்டிக்காட்டினர்.
அவர்கள் எல்லாம் வெளியில் வந்தால் நீங்கள் அவர்களுக்கு பொறுப்பேற்பீர்களா? என ஒரு நிருபர் கேள்வி கேட்டார். ஆம்! நாங்கள் பொறுப்பேற்போம் என்றனர்.
பிறகு மூன்று தலைவர்கள் சட்டத்துறை அமைச்சர் C.V. சண்முகம் அவர்களை சந்தித்து சிறைகைதிகள் விடுதலை குறித்து சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசினர்.
அதுபோல் அமைச்சர் S.P. வேலுமணி அவர்களையும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டின் அவர்களையும் இது தொடர்பாக சந்தித்து பேசினர்.
இருளும் துயரமும் சூழ்ந்து சிறையில் வாடும் குடும்பங்களில் வாழ்வில் மகிழ்ச்சியும் வசந்தமும் பொங்க பிரார்த்திப்போம்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்
02.01.18