(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) தேர்தலுக்கு முந்தைய எதிர்பார்ப்பின் படியே கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு வெளிவந்திருக்கிறது. பாஜக அதிக இடங்களைப் பெற்ற போதிலும் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு அருதிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. மதச்சார்பற்ற ஜனதா தளத்தோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று கர்நாடக விசன் போன்ற அமைப்புகள் வலியுறுத்தியபோது, காங்கிரஸ் கட்சியின் தலைமை அதை நிராகரித்தது. தங்களின் சாதனைகள் போதும் என்ற கற்பனையில் காங்கிரஸ் கட்சி மிதந்தது. தேவகவுடா அவர்கள், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் உவைசியின் M.I.M கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி வைத்தார். மேலும் மலையாளிகள் மற்றும் தெலுங்கர்களின் கணிசமான ஆதரவையும் பெற்றார். அது காங்கிரஸ் கட்சியின் வெற்றியை பெருமளவு பாதித்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் பாஜக 30 இடங்களில் கூட வென்றிருக்க வாய்ப்பு இருந்திருக்காது. இருப்பினும் பாஜகவின் மதவெறி- ஊழல் ஆட்சி கர்நாடகாவில் அமையவிடாமல் தடுக்கும் முயற்சியாக மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் இறங்கி வந்தது பாராட்டத்தக்கது. எது எப்படி இருந்தாலும், கர்நாடகாவில் அமையவிருக்கும் ஆட்சி,காவிரி ஆற்று
செய்திகள்
மத நல்லிணக்கத்தின் முன்னோடி குடியாத்தம்..! கோவில் திருவிழாவை முன்னிட்டு மஜக சார்பில் மத நல்லிணக்க தண்ணிர் பந்தல்..!!
வேலூர்.மே.15., வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகரம் 22 வார்டில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பாக நகர செயலாளர் S.அனீஸ் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அக்காலம் தொட்டு, இக்காலம் வரை இந்தியாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதில் முன்னிலை வகிப்பது தமிழகம் தான் என்பதற்கு எடுத்துக்காட்டாக எண்ணற்ற மத நல்லிணக்க நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. அதில் ஒன்றான நிகழ்வாக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் #குடியாத்தம்_கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கோடை காலத்தின் அதீத வெப்பத்தை பொது மக்கள் சமாளிக்கும் வகையிலும், தாளாத வெப்பத்திலிருந்து மக்களுக்கு இளைப்பாருதல் பெறவும் திருவிழாவிற்கு வந்த ஊர் பொதுமக்களுக்கு தண்ணீர் மற்றும் ஜூஸ் விநியோகம் செய்யப்பட்டது. இந் நிகழ்வில் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்ததனர். மஜக வேலூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் I.S.முனவ்வர் ஷரீப் அவர்கள் தண்ணீர் பந்தலை துவக்கி வைத்தார். மஜக-வினர் சமூக நல்லிணக்கத்தை நிலை நிறுத்தும் வகையில் ஒருவருக்கொருவர் மதிப்புடனும் தோழமையுடனும் மக்களிடம் தம்முடைய அன்புச் செயல்களாலும் சேவைகளாலும் செயல்படுவதால் அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக பொது மக்கள் வெகுவாக பாராட்டி சென்றனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_குடியாத்தம்_நகரம் #மஜக_வேலூர்_மேற்கு_மாவட்டம். 15.05.2018
அபுதாபி பனியாஸ் கிளை MKP ஆலோசனை கூட்டம்..!
அமீரகம்.மே.14. கடந்த வெள்ளிக்கிழமை (11-05-2018) அன்று அபுதாபி மண்டல பனியாஸ் கிளையின் மஜகவின் அயல்நாட்டு பிரிவான #மனிதநேய_கலாச்சார_பேரவை (#MKP) ஆலோசனை கூட்டம் கிளை செயலாளர் லால்பேட்டை. சாதுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அபுதாபி மண்டல செயலாளர் லால்பேட்டை. ஹாஜி S. A. முஹம்மது தையூப், மக்கள் தொடர்பாளர் (PRO) அடியற்கை. தமீமுன் அன்சாரி, அமீரக துணை செயலாளர் அடியற்கை. லியாகத் அலி மற்றும் பனியாஸ் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். இதில் வரும் ஜூலை 2 ம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கும் பிரம்மாண்ட இப்தார் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் மஜக பொதுச்செயலாளர் M. தமீமுன் அன்சாரி MLA அமீரகம் வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அனைவரும் அவரை கண்டு உரையாட ஆவலாக இருப்பதாகவும், இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக அமைய அனைவரும் பாடு படுவதாக தெரிவித்தனர். தகவல் : #MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #MKP_IT_WING #அபுதாபி_மண்டலம் #மனிதநேய_கலாச்சார_பேரவை #ஐக்கிய_அரபு_அமீரகம்
கத்தாரில் மாரடைப்பால் இறந்த சகோதரர் இளங்கோவன்..! குடுப்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மஜக மாநில பொருளாளர்..!
இராமநாதபுரம்.மே.14., கத்தாரில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வாலிபர் இளங்கோவன் (த/பெ. பெருமாள், வயது-24) கடந்த மே.05 அன்று சனிக்கிழமை மதியம் அல்கிஸ்ஸா என்னும் பகுதியில் நண்பர்களுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு தான் வேலைசெய்யும் வீட்டிற்க்கு புறப்படும் போது நண்பர்களிடம் நெஞ்சுவலிக்கிது என்று கூறியுள்ளார் நன்பர்கள் விரைந்து அவரின் தங்குமிடத்திற்க்கு அழைத்துச்சென்று மருத்துவணைக்கு செல்லலாம் என்று சென்று அவர் இருப்பிடம் நோக்கி புறப்பட்டுள்ளனர் அருகில் நெருங்கி இருப்பிடம் உள்நுழைந்த போது திடீரென மயங்கி விழுந்து கண்கள் இரண்டும் மரண தருவாயிலிருந்துள்ளது, உடனே மருந்துவமணைக்கு சென்றுள்ளனர் அங்கே மருத்துவர்கள் மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். கத்தார் நிர்வாகிகள் இளங்கோவனுடைய உறவினர்களுக்கு விசயத்தை தெரியப்படுத்தி, உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் இன்று அல்லது நாளை செவ்வாய்க்கிழமை அன்று சொந்த ஊருக்கு வரப்படும் என்ற தகவல் வந்துள்ளது. தகவலை அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்கள் நேற்று (13.05.2018) தோழர். இளங்கோவன் அவரது வீட்டிற்கு சென்று குடும்ப உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதில் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது இலியாஸ் , நகர செயலாளர் ஷாகுல் ஹமீது,
மஜக கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்!
கோவை.மே.14., கோவை மாநகர் மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சி செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் #MH_அப்பாஸ், தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில துணை பொதுச் செயலாளர் AK.சுல்தான்அமீர், மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் TA.நாசர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாநில செயற்குழு உறுப்பினர் ஆனமலை காஜா, மாவட்ட துணை செயலாளர்கள் PM.முகம்மதுரபீக், முஸ்தபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், துணை செயலாளர்கள் சபீர், பிரோஸ், அன்சர், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், சுற்று சூழல் அணி மாவட்ட துணை செயலாளர் அபு, பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜீஸ், இப்ராஹீம்( EBR), அக்கீம் (அர்னால்ட்) பகுதி நிர்வாகிகள் ஹாருண்ரஷீது, காதர், சமீர், முத்தலி, அப்பாஸ், ரஹ்மத்துல்லா, அபு, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கரும்புகடை பகுதியை சேர்ந்த சகோ சிராஜ் மற்றும் பல சகோதரர்கள் துணை பொதுச் செயலாளர் முன்னிலையில்