You are here

நத்தத்தில் சான்றோர் சந்திப்பு…!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மஜக நிர்வாகிகள் சந்திப்பு, சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரமுகர்கள் சந்திப்பு, சான்றோர் சந்திப்பு என மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவருடன் மாநில துணைச் செயலாளர் பேராவூரணி சலாம் அவர்களும் பயணத்தில் பங்கேற்றுள்ளார்.

இதில் ஒரு பகுதியாக கீழக்கரை அருகில் உள்ள நத்தம் கிராமத்தில் அங்குள்ள ஜமாத் நிர்வாகிகள் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு வரவேற்பளித்தனர்.

அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போது சமகால சிக்கல்களை நிதானமாக எதிர்கொள்வது குறித்து பொதுச்செயலாளர் அவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இந்த கலந்துரையாடல் சுமார் ஒரு மணி நேரம் வரை நடைபெற்றது.

இச் சந்திப்பில் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் முகவை நசீர், உறுப்பினர்கள் கீழை.இப்ராஹிம், முகவை அஜ்மல், நத்தம். அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

Top