சேலம் மாவட்ட நிர்வாக கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளரும், மாநிலத் துணைச் செயலாளருமான ஈரோடு பாபு ஷாஹின்ஷா அவர்கள் பங்கேற்று மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். அவருடன் MJVS மாநில பொருளாளர் AJS.தாஜ்தீன் அவர்கள் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் புதிய கிளைகள் அமைப்பது, கொடியேற்று நிகழ்வுகள் நடத்துவது, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர்கள் A.அஸ்லம் கான் BCA, தௌலத் பாஷா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.