
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு நீதி கேட்கும் வகையில் மே-17 இயக்கம் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பல தரப்பை சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்றனர்.
மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, CPI மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மஜக மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, SDPI பொதுச் செயலாளர் அச. உமர் பாரூர், தமஜக தலைவர் K.M.ஷெரிப், மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, நீதியரசர் அரி பரந்தாமன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்த ஒன்று கூடலில் மஜக மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராகிம், MJTS மாநிலத் துணைச் செயலாளர் மாத்தூர் இப்ராஹிம், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான், செங்கை வடக்கு மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாகீர், தென் சென்னை மாவட்டம் பாலவாக்கம் காதர், ரஷீத், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொருளாளர் பஷீர் அஹமது உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.