அபுதாபி பனியாஸ் கிளை MKP ஆலோசனை கூட்டம்..!

அமீரகம்.மே.14. கடந்த வெள்ளிக்கிழமை (11-05-2018) அன்று அபுதாபி மண்டல பனியாஸ் கிளையின் மஜகவின் அயல்நாட்டு பிரிவான #மனிதநேய_கலாச்சார_பேரவை (#MKP) ஆலோசனை கூட்டம் கிளை செயலாளர் லால்பேட்டை. சாதுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அபுதாபி மண்டல செயலாளர் லால்பேட்டை. ஹாஜி S. A. முஹம்மது தையூப், மக்கள் தொடர்பாளர் (PRO) அடியற்கை. தமீமுன் அன்சாரி, அமீரக துணை செயலாளர் அடியற்கை. லியாகத் அலி மற்றும் பனியாஸ் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

இதில் வரும் ஜூலை 2 ம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கும் பிரம்மாண்ட இப்தார் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும் மஜக பொதுச்செயலாளர் M. தமீமுன் அன்சாரி MLA அமீரகம் வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அனைவரும் அவரை கண்டு உரையாட ஆவலாக இருப்பதாகவும், இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக அமைய அனைவரும் பாடு படுவதாக தெரிவித்தனர்.

தகவல் :
#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKP_IT_WING
#அபுதாபி_மண்டலம்
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#ஐக்கிய_அரபு_அமீரகம்