மத நல்லிணக்கத்தின் முன்னோடி குடியாத்தம்..! கோவில் திருவிழாவை முன்னிட்டு மஜக சார்பில் மத நல்லிணக்க தண்ணிர் பந்தல்..!!

வேலூர்.மே.15., வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகரம் 22 வார்டில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பாக நகர செயலாளர் S.அனீஸ் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

அக்காலம் தொட்டு, இக்காலம் வரை இந்தியாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதில் முன்னிலை வகிப்பது தமிழகம் தான் என்பதற்கு எடுத்துக்காட்டாக எண்ணற்ற மத நல்லிணக்க நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

அதில் ஒன்றான நிகழ்வாக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் #குடியாத்தம்_கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கோடை காலத்தின் அதீத வெப்பத்தை பொது மக்கள் சமாளிக்கும் வகையிலும், தாளாத வெப்பத்திலிருந்து மக்களுக்கு இளைப்பாருதல் பெறவும் திருவிழாவிற்கு வந்த ஊர் பொதுமக்களுக்கு தண்ணீர் மற்றும் ஜூஸ் விநியோகம் செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்ததனர்.

மஜக வேலூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் I.S.முனவ்வர் ஷரீப் அவர்கள் தண்ணீர் பந்தலை துவக்கி வைத்தார்.

மஜக-வினர் சமூக நல்லிணக்கத்தை நிலை நிறுத்தும் வகையில் ஒருவருக்கொருவர் மதிப்புடனும் தோழமையுடனும் மக்களிடம் தம்முடைய அன்புச் செயல்களாலும் சேவைகளாலும் செயல்படுவதால் அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக பொது மக்கள் வெகுவாக பாராட்டி சென்றனர்.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING
#மஜக_குடியாத்தம்_நகரம்
#மஜக_வேலூர்_மேற்கு_மாவட்டம்.
15.05.2018